திருவண்ணாமலை, முதல் மனைவிக்கு தெரியாமல் சிறுமியை திருமணம் செய்த போலீஸ்காரருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருவண்ணாமலை மகளிர் விரைவு கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. திருவண்ணாமலை மாவட்டம் வெறையூர் தண்டரை மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 41). இவரது மனைவி விமலா. இந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு மணிகண்டன், விமலாவிற்கு தெரியாமல் சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்துள்ளார். இதனால் அந்த சிறுமி கர்ப்பம் அடைந்தார். விசாரணை இதுபற்றி அறிந்ததும் விமலா தண்டராம்பட்டு அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை திருவண்ணாமலை ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் உள்ள மகளிர் விரைவு கோர்ட்டில் நடந்து வந்தது. சிறை தண்டனை இந்த நிலையில் நேற்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி தாமோதரன் தீர்ப்பு கூறினார். அதில் மணிகண்டனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். பின்னர் அவரை போலீசார் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தண்டனை பெற்ற மணிகண்டன் போலீஸ்காரர் என்பதும், சிறுமியை திருமணம் செய்ததால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/policeman-gets-10-years-in-prison-for-marrying-a-minor-girl-without-the-knowledge-of-his-first-wife




