நடிகர் அஜித்குமார் கார் ரேஸிங்கை விட்டு மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்த வேண்டும் என நடிகர் மன்சூர் அலிகான் வித்தியாசமான கடிதம் ஒன்றை அவருக்கு அனுப்பியுள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழும் அஜித்குமார், கார் பந்தய வீரராகவும் தனது திறமையை நிரூபித்து வருகிறார். 'குட் பேட் அக்லி' படத்திற்கு பிறகு கார் ரேசிங்கில் அதிக கவனம் செலுத்தி வரும் அவர், 'அஜித்குமார் ரேசிங்' என்ற தனது சொந்த பந்தய அணியையும் தொடங்கினார். கார் ரேசிங் இந்த அணி துபாய், பெல்ஜியம், ஸ்பெயின், அபுதாபி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற பல்வேறு சர்வதேச போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை வென்றுள்ளது. தொடர்ந்து பல முக்கிய ரேசிங் தொடர்களிலும் அஜித்குமார் அணி கலந்து கொண்டு வருகிறது. தமிழ் சினிமாவில் வெற்றிடம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக பிரதான போட்டியாளர்களாக விளங்கியவர்கள் விஜய் - அஜித். தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி விஜய் தேர்தலில் வென்று முதல்வர் ஆன நிலையில் தமிழ் சினிமாவில் பெரும் வெற்றிடம் உருவாகியுள்ளது. மறுபுறம் நடிகர் அஜித்குமார் தனக்கு விருப்பமான கார் ரேஸிங்கில் அண்மைக் காலமாக அதிக கவனம் செலுத்தி வருகிறார். துபாய் உள்ளிட்ட நாடுகளில் நடக்கும் பந்தயங்களில் தனது அணியுடன் அவர் பங்கெடுத்து வருகிறார். இதனால் சினிமாவுக்கு லீவு விட்டுள்ள அவர் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. கடைசியாக ஆதிக் இயக்கத்தில் அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ ஹிட் அடித்தது. இதன்பின்னர் அஜித் சினிமாவுக்கு முழுக்கு போட்டு ரேஸிங் பக்கம் சென்றார். அடுத்த படம் எப்போது தொடங்கும் என்ற தகவல்களும் இல்லை. இடையில் அவரது தாயார் இறந்த நிலையில் இறுதிச்சடங்குகளை செய்ய வெளிநாட்டில் சென்னை வந்தார். இதன்பின் குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட்டு வருகிறார். மீண்டும் அவர் கார் ரேஸிங்கில்தான் கவனம் செலுத்த உள்ளதாக கூறப்படுகிறது. கோரிக்கை இந்த நிலையில், சினிமா தொழிலாளர்களின் வாழ்வாதரத்தை கருத்தில் கொண்டு அவரை மீண்டும் நடிக்க வருமாறு அஜித்துக்கு மன்சூர் அலிகான் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், “லட்சக்கணக்கான தொழிலாளர்கள் நலனுக்காக, நடிக்க வாங்க அஜித்குமார் அவர்களே. அல்டிமேட் ஸ்டார் அஜித்குமார் அவர்களுக்கு மன்சூர் அலிகானின் பணிவான வேண்டுகோள்! தங்களை அடையாளம் கண்டது சினிமா. கோடிக்கணக்கான ரசிகர்கள் உங்கள் நடிப்பில் உருவானதற்கு காரணம் சினிமா. விஜய் அவர்கள் முதல்-அமைச்சர் ஆகிவிட்டார். நீங்கள் ரேஸ், ரேஸ் என்று மிகவும் ரிஸ்க் ஆன, உயிரைப் பணயம் வைக்கும், கார் ரேஸ்தான் பேஷன் என்று உள்ளீர்கள். தயவு செய்து லட்சக்கணக்காண தொழிலாளர்களுக்கு வாழ்க்கை தரும் திரைத்துறைன கருத்தில் கொண்டு, ரசிகர்களையும் மகிழ்சிப்படுத்த, 10 தயாரிப்பாளர்களை சேர்ந்து தயாரிக்க வைத்து, உன்னத லட்சியத்திற்காக நடிக்க வாருங்கள் என்று இரு கரம் கூப் இரு கரம் நீட்டி வரவேற்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/cinema/cinemanews/ajith-to-come-and-act-mansoor-ali-khan-requests




