மதுரை, விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி பண்டிகை உள்ளிட்ட விழாக்களுக்கு சிலைகள் தயாரித்து விற்கும் தொழிலில் ஈடுபட்டு வரும் ராஜஸ்தானை சேர்ந்த வேலராம் என்பவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், அனுமதியின்றி தொழில் செய்வதாக கூறி மதுரை மாநகராட்சி நிர்வாகம் தனக்கு நோட்டீஸ் அனுப்பியதாகவும், உரிய விளக்கமளிக்க 7 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்ட நிலையில், அதிகாரிகள் அதற்குள் தன்னுடைய சிலை தயாரிப்பு வளாகத்தை பூட்டி சீல் வைத்துவிட்டதாகவும் தெரிவித்திருந்தார். மேலும் சிலைகள் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் மற்றும் தெர்மாகோல் போன்றவற்றிற்கு விதிக்கப்பட்ட நிபந்தனையை நீக்க வேண்டும் என்றும் அவர் கோரியிருந்தார். இந்த மனு நீதிபதி விக்டோரியா கவுரி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, பிளாஸ்டர் ஆப் பாரிஸ் பயன்படுத்தி சிலை தயாரிக்க கூடாது என்ற நிபந்தனைக்கு இடைக்கால தடை விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். மேலும் விநாயகர் சிலைகளை தடையின்றி விற்பனை செய்ய அனுமதி வழங்குவதாகவும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். விநாயகர் சதுர்த்தி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு சிலை தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் மத்தியில் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/issue-regarding-the-use-of-plaster-of-paris-madurai-bench-of-the-high-court-permits-the-sale-of-vinayagar-idols-without-hindrance



