சென்னை, தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:- வேளாண் வணிகத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் மாம்பழம், எண்ணெய் வித்துக்கள் மற்றும் பருத்திக்கான விலை குறைவுக்கான தொகை வழங்கும் திட்டங்களில் மானியம் மற்றும் சலுகைகளை பெறும் பயனாளிகள் தங்களது ஆதார் எண்ணை சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆதார் எண் இல்லாதவர்கள், புதிய ஆதார் அட்டைக்கு விண்ணப்பித்திருக்க வேண்டும். ஆதார் எண் கிடைக்கும் வரை, ஆதார் பதிவு செய்ததற்கான ஒப்புகை சீட்டுடன், வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு, பாஸ்போர்ட், ஓட்டுனர் உரிமம். சாதி சான்றிதழ், மாற் றுத்திறனாளி சான்றிதழ் அல்லது மருத்துவ அடையாள அட்டை உள்ளிட்ட மாற்று ஆவணங் களில் ஏதேனும் ஒன்றை சமர்ப்பித்து சலுகைகளை பெறலாம். இந்த ஆவணங்களை அதிகாரி கள் இணையதளம் மூலம் சரிபார்ப்பார்கள். கைரேகை, முகம் அல்லது கருவிழி பதிவு மூலம் ஆதார் சரிபார்ப்பு தோல்வியடைந்தால், செல் போன் 'ஓ.டி.பி.' அல்லது 'கியூ.ஆர். கோடு' மூலம் சரிபார்க்கப்படும். 18 வயதுக்குட்பட்ட குழந் தைகளுக்கு ஆதார் எண் இல்லை என்றாலும், பெற்றோரின் ஆவணங்களை சமர்ப்பிப்பதன் மூலம் சலுகைகள் மறுக்கப்பட மாட்டாது. மேலும், 18 வயதுக்கு மேற்பட்ட பயனாளிகளுக்கு சலுகைகள் மறுக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய, மத்திய அரசின் நேரடி மானிய பரி மாற்ற திட்டத்தின் 2017-ம் ஆண்டு வழிகாட்டுதலின்படி விதிவிலக்கு நடைமுறைகள் பின்பற்றப் படும். இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/aadhaar-number-mandatory-for-agricultural-subsidy-schemes-tamil-nadu-government




