திருச்சி மாவட்டம், துறையூர் சிக்கம் பிள்ளையார் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பாபுராஜ் (வயது: 71). இவரது மனைவி கண்ணம்மாள். இவர், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாத சூழலில், திடீரென்று இறந்தார். இந்நிலையில், மனைவி மீது அளவற்ற பாசம் வைத்திருந்த அவரது கணவரான பாபுராஜால், மனைவி பிரிவைத் தாங்கிக் கொள்ள இயலாமல் அல்லாடி வந்திருக்கிறார். இந்தக் கவலையில் அவரது உடல் நலன் பெரிதும் பாதிக்கப்பட்டது. உறவினர்கள் அவரை மீட்டு அருகாமையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்து வந்தனர். சிகிச்சைக்குப் பிறகு பாபுராஜ் தனது வீட்டில் இருந்தார். இந்த நிலையில், வீட்டில் அவர் திடீரென மயங்கி விழுந்தார். trichy மீண்டும் உறவினர்கள் அவரை மீட்டு அதே மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு பாபுராஜ் விஷம் குடித்து இருப்பதாகத் தெரிவித்து உள்ளனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக இருங்கலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்த போதிலும் சிகிச்சை பலனளிக்காமல் பாபுராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து, அவரது மகன் சரவணக்குமார் அளித்த புகாரின் அடிப்படையில் துறையூர் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மனைவி இறந்த துக்கம் தாளாமல் முதியவர் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்த கொண்டுள்ள சம்பவம், அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கூட்டுக் குடும்பத்தில் மோதல்; அதிக சத்தத்துடன் மியூசிக்; சகோதரர்கள் சண்டையில் தந்தை, மகன் கொலை முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.vikatan.com/crime/elderly-man-takes-a-drastic-step-unable-to-bear-grief-of-his-wifes-death




