வேலாயுதம்பாளையம், கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பெருமாள் கோவில்களில் ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. நொய்யல் அருகே கோம்புப்பாளையம் ஸ்ரீதேவி, பூதேவி சமேத சீனிவாச பெருமாள் கோவிலில் ஆடி மாத ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீதேவி, பூதேவி சமேத சீனிவாச பெருமாளுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட18 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து துளசி இலை மற்றும் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சீனிவாச பெருமாள் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அதேபோல், குட்டக்கடை -புன்னம் செல்லும் சாலையில் உள்ள அனுமந்தராய பெருமாள் கோவிலில் அனுமந்தராய பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பெருமாள் கோவில்களில் ஏகாதசியை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/devotional/velayuthampalayam-ekadashi-special-worship-at-perumal-temples




