திருவனந்தபுரம், திருவனந்தபுரத்தில் முதல்-மந்திரி வி.டி.சதீசன் நிருபர்களிடம் கூறியதாவது:- கல்லாடியில் கனமழையை தொடர்ந்து மிகப்பெரிய அளவில் நிலச்சரிவு ஏற் பட்டு 5 பேர் உயிரிழந்து உள்ளனர். மாயமானவர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டு உள்ளது. நிலச்சரிவில் கட்டுமான பொருட்கள், எந்திரங் கள் சேதம் அடைந்துள்ளன. கட்டுமான பணிக்காக பாறைகளை வெடிமருந்து வைத்து தகர்த்தபோது நிலச்சரிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் கட்டுமான நிறுவனத்தின் அலுவலகமாக செயல்பட்ட கன்டெய்னர்கள், மண் அள்ளும் எந்திரம் போன்றவை மண்ணுக்கடியில் புதைந்துள்ளன.' சுரங்கப்பாதை அமைக்கும் இடத்தில் குவிக்கப்பட்டு இருந்த மணல் குன்று களை நீக்க ஏற்கனவே மாவட்ட கலெக்டர் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரருக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தார். அந்த உத்தரவு மீறப்பட்டதே இந்த துயர சம்பவத்திற்கு காரணம். இது மிகவும் துரதிர்ஷ்டமான பேரழிவு ஆகும். மண்ணுக்கடியில் சிக்கியவர்களை மீட்டும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் உள்பட 300-க்கு மேற்பட்டோர் ஈடுபட்டு வருகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார். வயநாடு கேரளம் மாநிலம் வயநாடு, கோழிக்கோடு மாவட்டங்களை இணைக்கும் வகையில் 8% கி.மீ. நீள சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடந்து வரு கிறது. அனக்கம்பொயில்-கல்லாடி-மேப்பாடி வழியாக சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த சுரங்கப்பாதை திட்டம் மூலம் வயநாட் டில் இருந்து கோழிக்கோட்டுக்கு செல்லும் பயணம் நேரம் குறையும். அதோடு இது கேரளத்தில் அமைக்கப்படும் நீளமான சுரங்கப்பாதை திட் டம் ஆகும்.சுரங்கப்பாதை அமைக்கும் பணியில் வடமாநில தொழிலாளர்கள் கடந்த சில மாதங்களாக ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக கல்லாடி பகுதியில் சுரங்கப்பாதை நுழைவுவாயில் அருகே தற்காலிகமாக ஷெட்டுகள் அமைத்து அவர்கள் தங்க வைக்கப்பட்டு இருந்தனர்.இதற்கிடையே, வயநாட்டில் நேற்று காலை முதலே கனமழை பெய்தது. நிலச்சரிவு அப்போது மேப்பாடி அடுத்த கல்லாடி பகுதியில் மீனாட்சி பாலம் பகுதியில் சுரங்கப்பாதை நுழைவுவாயில் அருகே 20 தொழிலாளர்கள் வழக்கம் போல் பணியில் ஈடுபட்டு இருந்தனர். காலை 11.15 மணியளவில் சுரங்கப் பாதை நுழைவுவாயில் அருகே திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் மலைச்சரிவில் இருந்து நீரோடு மண் அடித்து வரப்பட்டது. நிலச்சரிவு அங்குள்ள சாலையை மூடியது. அந்த சமயத்தில் சாலையில் சென்ற டேங்கர் லாரியை நிலச்சரிவு பின்னோக்கி தள்ளியபடி சென்றது. இதை பார்த்த பிற வாகன ஓட்டிகள் பதறியபடி தங்களது வாகனங்களை பின்னோக்கி இயக்கி சென்றனர். மேலும் அங்கு நின்று கொண்டிருந்தவர் கள் உயிரை கையில் பிடித்தபடி ஓட்டம் பிடித்தனர். ஆனால் சுரங்கப்பாதை பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த வடமாநில தொழிலாளர்கள் 20 பேரில் சிலர் நிலச்சரிவில் சிக்கினர். உடனே அப்பகுதி மக்கள் மீட்பு பணியில் ஈடுபட தொடங்கினர். தகவல் அறிந்த முதல்-மந்திரி வி.டி.சதீசன் மீட்பு பணிகளை முடுக்கிவிட்டார். அவரது உத்தரவின்பேரில், தேசிய பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு வீரர்கள், வயநாடு போலீசார், வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணிகளை மேற்கொண்டனர்.நிலச்சரிவுக்கு பின்பும் கனமழை பெய்ததால், மீட்பு பணியை மேற்கொள்வது சவாலாக இருந்தது. இருப்பினும், மீட்பு குழுவினர் ஒருங்கிணைந்து முழு வீச்சில் மீட்பு பணியில் ஈடுபட்டனர். 5 பேர் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தனர்.மண்ணுக்குள் சிக்கியிருந்த 7 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். அவர்கள் மேப்பாடி தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். நிலச்சரிவில் சிக்கிய 8 தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரமாக நடை பெற்று வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/india/what-caused-the-wayanad-landslide-kerala-chief-minister-vd-satheesan-speaks-to-the-press




