அமெரிக்கா-ஈரான் இடையேயான போரில் தற்போது புரிந்துணர்வு ஒப்பந் தம் ஏற்பட்டு அமைதி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்தநிலையில் ஹார்முஸ் நீரிணையில் கத்தார் மற்றும் சவூதி அரேபியா எண்ணெய் கப் பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஓமன் கடற்கரை அருகே சென்று கொண்டிருந்த இந்த கப்பல்கள் மீது நேற்று ஏவுகணை தாக்கியது. இதில் அந்த கப்பல்கள் தீப்பிடித்து எரிந்து சேதம் அடைந்தன. ஹார்முஸ் நீரிணையில் இருந்து தெற்கு நோக்கி ஓமன் வளைகுடாவை நோக்கிச் செல்ல முயன்றபோது இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. அமெரிக்கா கெடுக்கிறது ஹார்முஸ் நீரிணையில் தாங்கள் வகுத்துள்ள பாதையில் கப்பல்கள் செல்ல வேண்டும் என்று ஈரான் தெரிவித்துள்ளது. இந்த பாதையில் செல் லும் கப்பல்களுக்கு சுங்க கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் அதனை மீறும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்திருந்தது.இதனை எதிர்த்து அமெரிக்காவின் பாதுகாப்புடன் ஹார்முஸ் நீரிணையை கடக்க முயற்சிக்கும் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும் ஹார்முஸ் நீரிணையில் தங்களுடைய இறையாண்மையை நிலை நாட்டும் முயற்சியை அமெரிக்கா கெடுப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளது. எச்சரிக்கை இதுகுறித்து ஈரான் வெளியிட்டுள்ள அறிக்கையில், "எங்கள் நாட்டை அச் சுறுத்தும் வகையிலும், இறையாண்மையை சீர்குலைக்கும் வகையில் நடந்து கொண்டால் தக்க பதிலடி கொடுப்போம். அமெரிக்கா தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தால் அந்த நாட்டுடனான அமைதி பேச்சுவார்த் தையில் இருந்து அதிரடியாக வெளியேறி போர் தாக்குதல் நடத்தவும் தயங்க மாட்டோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரான் உச்சத் தலை வர் காமேனியின் இறுதி சடங்கு நிகழ்வுகளை முன்னிட்டு அமைதி பேச்சு வார்த்தைகளில் இருந்து ஈரான் தற்காலிகமாக ஒதுங்கியுள்ளது குறிப்பிடத் தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/world/iran-warns-it-will-withdraw-from-peace-talks-with-the-us




