சென்னை, இலவச மருத்துவ காப்பீடு சட்டசபையில் தி.மு.க. எம்.எல்.ஏ. சக்கரபாணி பேசும்போது, இலவச மருத்துவ காப்பீடு ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த சலுகையை பெறுவதற்கு உச்ச வருமானம் எவ்வளவு என கேள்வி எழுப்பினார். அதேபோன்று அ.தி.மு.க. கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி, அவர்களுக்கு செலுத்தப்படுகின்ற பிரிமீயம் தொகை எவ்வளவு அது, இத்திட்டத்தில் சேர்ந்துள்ளவர்களுக்கு எப்போது செலுத்தப்படும் என கேள்வி எழுப்பினார். பிரிமீயம் உயராது இந்த கேள்விகளுக்கு பதில் அளித்து அமைச்சர் அருண்ராஜ் கூறியதாவது:- ரூ.25 லட்சம் மருத்துவ காப்பீட்டுக்கும் தற்போது இருக்கும் அதே வருமான உச்சவரம்பு தான். தற்போது ஒரு நபருக்கு ரூ.800 முதல் 900 வரை பிரிமீயம் செலுத்தப்படுகிறது. ரூ.25 லட்சமாக மருத்துவ காப்பீடு உயர்த்தப்பட்டுள்ளதால் பிரிமீயம் தொகை 5 மடங்காக ஆகிவிடுமா? அதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதா? என்ற கேள்வியெல்லாம் எழுகிறது. இன்சூரன்ஸ் திட்டத்தை பொறுத்தமட்டில், அதுபோன்று இன்சூரன்ஸ் தொகை உயரும் போது பிரீமியம் தொகை அதே மடங்கு உயராது. இன்சூரன்ஸ் கிளைம் ரூ.25 லட்சமாக இருந்தால் கூட அந்த தொகைக்கு கிளைம் செய்கிறவர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும் என்பதால் பிரிமீயம் தொகை 5 மடங்கெல்லாம் உயராது. புதிய டெண்டர் இத்திட்டத்துக்கு, எவ்வளவு நிதி தேவைப்படும் என்பதை கணக்கில் கொண்டு தான் நிதி ஒதுக்கீடு செய்துள்ளோம். ஏற்கனவே இருந்து வரும் மருத்துவ காப்பீட்டு திட்டம் டிசம்பர் மாதத்துடன் முடிவடைகிறது. ஜனவரி மாதத்தில் புதிய டெண்டர் கோரும் போது பிரிமீயம் தொகை எவ்வளவு வரும் என்பது தெரியவரும். இவ்வாறு அவர் கூறினார். அமைச்சரின் இந்த பதில் மூலம் ரூ.25 லட்சம் மருத்துவ காப்பீட்டு திட்டம் ஜனவரி மாதத்துக்கு பின்பு அமலுக்கு வரும் என்பது தெரிகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/when-will-the-rs-25-lakh-free-medical-insurance-scheme-come-into-effect-minister-arunraj-clarifies




