தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான கார்த்தி நடிப்பில், ‘சர்தார் 2’ திரைப்படம் உருவாகியிருக்கிறது. இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கடந்த 2022-ம் ஆண்டு வெளியான ‘சர்தார்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது அதன் இரண்டாம் பாகம் உருவாகி இருக்கிறது. கார்த்தியுடன் எஸ்.ஜே. சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரித்துள்ளது. சர்தார் 2 இயக்குநர் மித்ரன் இந்தப் படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு முன் செய்தியாளர்களைச் சந்தித்த சர்தார் திரைப்பட இயக்குநர் மித்ரன், ``என்னுடைய திரைப்பயணத்தில் இதுவே முதல் பெரிய அளவிலான இசை வெளியீட்டு விழா என்று நினைக்கிறேன். வரும் செப்டம்பர் 10-ஆம் தேதி திரைப்படம் திரைக்கு வருகிறது. ட்ரைலரைப் பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களைக் கூறுங்கள். இந்தப் படத்தில் பல சிறப்பம்சங்கள் உள்ளன. முக்கியமாக, முதன்முறையாக எஸ்.ஜே. சூர்யா சாரும் கார்த்தி சாரும் இணைந்து நடிக்கிறார்கள். அதுவே இந்தப் படத்தின் மிகப்பெரிய ஹைலைட். மேலும், படத்தில் 'வேல்' குறித்த கேள்விகள் எழுகின்றன. இப்போது முருகர் ரெபரென்ஸ் படங்கள் அதிகம் வருகின்றன. ஆனால், சர்தார் முதல் பாகத்திலேயே கார்த்தியின் கதாபாத்திரம் முருகப் பக்தராகவும், முருகர் வேஷம் அணிந்து பாட்டுப் பாடுபவராகவும்தான் காட்டப்பட்டிருக்கும். அதுவே இந்த இரண்டாம் பாகத்திலும் தொடர்கிறது. துரந்தருக்கு முன்பே கமல் சாரின் 'விஸ்வரூபம்' போன்ற திரைப்பட வரிசையில் ஸ்பை திரில்லராக வந்திருக்கிறது. அந்த வரிசையில்தான் சர்தார் 2 உருவாக்கப்பட்டுள்ளது. துரந்தர் வேறு சர்தார் வேறு துரந்தருடன் சர்தாரை சேர்த்து நசுக்கிவிடாதீர்கள்." என நகைச்சுவையாகப் பேசினார். Sardar 2: "சர்தார் 2 படம் மிகப்பெரிய போரைப் பற்றி பேசுது" - கார்த்தி சொல்லும் ரகசியம்! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://cinema.vikatan.com/kollywood/sardar-2-director-mithran-press-meet-at-music-and-trailer-launch-event


