திருவனந்தபுரம், கேரளாவில் மலை உச்சியில் இருந்து தற்கொலைக்கு முயன்ற மாணவியை போலீசார் பத்திரமாக மீட்டனர். கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் வண்டிப்பெரியார் பகுதியை சேர்ந்த மாணவி பிளஸ் 2 படித்துள்ளார். இவர் எம்.பி.பி.எஸ். பட்டம் படிக்க நினைத்தார். ஆனால், பிளஸ் 2வில் வணிகப்பிரிவு எடுத்ததால் எம்.பி.பி.எஸ். படிப்புக்கான நீட் தேர்வு தேர்வை எதிர்கொள்வதிலும் சிரமப்பட்டுள்ளார். இதனால் விரக்தியடைந்த மாணவி தற்கொலை செய்ய முடிவெடுத்து இடுக்கியில் உள்ள பருந்துப்பாறை மலை உச்சிக்கு சென்றுள்ளார். மாணவி மீட்பு அங்கிருந்து கீழே குதிக்க மாணவி முடிவெடுத்துள்ளார். அப்போது, அப்பகுதியில் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்த நபர் மாணவி மலை உச்சியில் ஆபத்தான பகுதிக்கு செல்வதை அறிந்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார் மாணவியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். போலீசாரின் பேச்சுவார்த்தையில் மனம் மாறிய மாணவி தற்கொலை முடிவை கைவிட்டார். இதையடுத்து, உடனடியாக மாணவியை போலீசார் பத்திரமாக மீட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/india/kerala-malai-uchchiyil-irundhu-tharkolaikku-muyandha-manavi-pathiramaga-meetta-policear




