மதுரை மேலூர் அருகே கண்மாய் பகுதியில் இளம்பெண்ணை கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்த சம்பவத்தில் 5 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 33 வயதுடைய பெண்ணுக்கு திருமணமாகி ஒரு ஆண், பெண் குழந்தைகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக அந்த பெண் கணவரை பிரிந்து வசித்து வந்தார். கட்டிட வேலைக்கும் சென்று வந்தார். தோழியின் நட்பு இவரது வீட்டின் அருகில் வசிக்கும் அனிதா என்பவர் அவரிடம் நட்பாக பழகினாராம். இந்த நிலையில் மதுரை மாவட்டம் மேலூரில் ஒரு மூதாட்டியை பார்த்துக்கொள்ள ஆள் வேண்டும் எனக்கூறி ஒரு செல்போன் எண்ணை அனிதா கொடுத்துள்ளார். அதன்படி அந்த எண்ணுக்கு அப்பெண் தொடர்பு கொண்டு பேசினார். எதிர்முனையில் பேசியவர் மேலூருக்கு வருமாறும், பணம் தருவதாகவும் கூறியுள்ளார். இதனை நம்பி அந்த பெண் சம்பவத்தன்று இரவு மேலூருக்கு வந்தார். அங்கு 20 வயது வாலிபர் ஒருவர் அந்த பெண்ணை அழைத்து கொண்டு தாமரைப்பட்டி பகுதியில் டாஸ்மாக் கடை அருகே உள்ள கண்மாய் பகுதிக்கு சென்றார். அங்கு ஏற்கனவே 4 பேர் நின்று கொண்டிருந்தனர். அங்கு அந்த பெண்ணை இறக்கி விட்டு அந்த வாலிபர் தப்பி சென்றுள்ளார். கூட்டு பலாத்காரம் அதன்பின் அந்த இளம்பெண்ணை அங்கிருந்த 4 பேரும் மிரட்டி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் பெண்ணிடம் இருந்து அரை பவுன் தங்கச்சங்கிலி, வெள்ளி கொலுசு, செல்போன் உள்ளிட்டவற்றை பறித்துக்கொண்டு 4 பேரும் ஓடிவிட்டதாக தெரிகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை மிரட்டி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த 4 பேரையும், அதற்கு உடந்தையாக இருந்த செல்போன் எண் கொடுத்த அனிதா, இளம்பெண்ணை அழைத்து சென்ற வாலிபர் உள்பட மற்றவர்களையும் தேடி வந்தனர். போலீசார் விசாரணை அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக தாமரைப்பட்டியை சேர்ந்த வினித் (வயது 21), செல்வகுமார் (33), அரவிந்த் (26), வீரபாண்டி (30) மற்றும் ஒரு சிறுவன் ஆகிய 5 பேரை கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/young-woman-taken-to-kanmai-area-on-the-pretext-of-employment-gang-of-6-brutally-assaults-her




