சென்னை, சென்னை ஐகோர்ட்டில் துரைப்பாக்கத்தைச் சேர்ந்த மிருதுளா கோபாலகிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், 'தமிழக கோவில்களுக்கு அசாமில் இருந்து 5 யானைகளை கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த யானைகளின் பிறப்பு, உரிமையாளர் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து ஆய்வு செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டு நியமித்துள்ள குழுவுக்கு கடந்த 16-ந் தேதி மனு அளித்தேன்.அந்த மனுவை பரிசீலிக்க, சுப்ரீம் கோர்ட்டு குழுவுக்கு உத்தரவிட வேண்டும்' என கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, மனுதாரர் செப்டம்பர் 16-ந் தேதி மனு அனுப்பிய நிலையில், அதனை பரிசீலிக்க அவகாசம் வழங்காமல் மறுநாளே வழக்கு தாக்கல் செய்துள்ளதாக கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும் அந்த உத்தரவில், 'முதல் நாள் மனு அளித்து விட்டு, மறுநாள் வழக்கு தாக்கல் செய்வது, நீதித்துறை நடவடிக்கையை, தபால் அலுவலக பணியாக தரம் தாழ்த்துகிறது' என நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/treating-the-high-court-like-a-post-office-chief-justice-expresses-displeasure




