சென்னை, சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஆகாஷ். இவர் மது, கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் பழக்கத்திற்கு அடிமையாக இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் போதை மாத்திரைகளை கரைத்து ஊசி மூலம் உடலில் செலுத்திக் கொள்ளும் பழக்கம் கொண்டவராகவும் இருந்து வந்துள்ளார். இவ்வாறு அடிக்கடி போதையை ஊசி மூலம் அவர் உடலில் செலுத்திக் கொண்ட காரணத்தினால், உடல்நிலை பாதிக்கப்பட்டு வெகு நாட்களாக சென்னை அரசு ஸ்டான்லி பொது மருத்துவமனையில் ஆகாஷ் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால் போதை ஊசியின் பழக்கத்தினால் நரம்புகள் அனைத்தும் தளர்வடைந்த நிலையில், சிகிச்சை பலனின்றி ஆகாஷ் மருத்துவமனையில் உயிரிழந்தார். இது குறித்து வண்ணாரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து, போதை ஊசிகள் எங்கு கிடைக்கிறது? யாரெல்லாம் இதை பயன்படுத்துகிறார்கள்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-dies-in-chennai-after-injecting-drugs




