திருச்சி, பராமரிப்பு பணிகள் தெற்கு ரெயில்வேயின் பல்வேறு பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடை பெற்று வருவதால், திருச்சி வழியாக செல்லும் ரெயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்து உள்ளது. அதன்படி திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் இருந்து காலை 8.40 மணிக்கு புறப்படும் திருச்சி-காரைக்கால் டெமு ரெயில் (வண்டி எண்: 76820) இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 10-ந்தேதி வரை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயிலானது திருச்சியில் இருந்து திருவாரூர் வரை மட்டுமே இயங்கும். மறுமார்க்கமாக காரைக்காலில் இருந்து மாலை 2.55 மணிக்கு புறப்படும் காரைக்கால்-திருச்சி டெமு ரெயில் (வண்டி எண்: 76819) மேற்கண்ட தேதி களில் காரைக்கால் திருவாரூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படு கிறது. இந்த ரெயிலானது திருவாரூரில் இருந்து மாலை 4.15 மணிக்கு புறப் பட்டு திருச்சி செல்லும். எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இதேபோல் செங்கோட்டை மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 16848) நாளை (சனிக்கிழமை) முதல் 11-ந்தேதி வரையும், கன்னியா குமரி ஹவுரா அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 12666) நாளையும், நாகர்கோவில் மும்பை சி.எஸ்.டி.எம். எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 16352) வருகிற 9-ந் தேதியும் திருப்பி விடப்பட்டு மதுரை, மானாமதுரை, காரைக்குடி வழியாக திருச்சி வந்து செல்லும். இந்த தக வலை திருச்சி கோட்ட ரெயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி வினோத் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/changes-to-train-services-passing-through-trichy-3




