Full Article
சட்டமன்றக் கூட்டத்தொடர் நான்காவது நாளாக இன்று (ஜூன்.23) நடைப்பெற்று வருகிறது. கூட்டத்தொடரில் முதல்வர் விஜய் பதிலுரை ஆற்றினார். அவையில் பேசிய அவர், "வாகை சூடும் வரலாறு திரும்பி உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள நச்சு கலாசாரத்தைச் சுக்குநூறாக உடைத்துள்ளோம். கரூர் விவகாரத்தில் 41 பேர் உயிரிழந்தது பெரும் வேதனை அளிக்கிறது. கரூர் விவகாரத்தில் என் மீது பழி போட்டனர். 2017 முதல் 2026 வரை ஆட்சி செய்தவர்கள் ஒவ்வொரு துறையிலும் ஏற்படுத்திய ஓட்டைகளை அடைத்து வருகிறோம். நமக்கு எதிரானவர்கள் ஒன்று சேர்கிறார்கள். ஒரு குடும்பம் முக்கியமில்ல, ஒவ்வொரு குடும்பமும் முக்கியம் என்று சொல்லக்கூடிய ஆட்சி எங்களுடையது. முதல்வர் விஜய் பெண்களுக்குப் பாதுகாப்பான தமிழ்நாட்டை உருவாக்குவோம். மக்கள் பணி செய்தவர்களுக்கு மக்கள் பணத்தைச் சுருட்டத் தெரியாதுதான். நாம் யாருடைய டீமும் அல்ல. நாம் மக்கள் டீம். கோயில் பணத்தைக் கொள்ளையடிக்கத் தெரியாது. கனிமவளங்களைக் கொள்ளையடிக்கத் தெரியாது. பணி உயர்வு மற்றும் பணியிட மாற்றத்துக்கு பணம் வாங்கத் தெரியாது. கடந்த கால நிர்வாகக் குளறுபடியே மின்வெட்டுக்குக் காரணம். வேண்டுமென்றே சிலரின் நடவடிக்கையால்தான் மின்வெட்டு ஏற்படுகிறது. மின்தடையைச் சீரமைக்க ரோந்து வாகனம் மூலம் நடவடிக்கை எடுத்து வருகிறோம். மின்வெட்டு பிரச்னை அறவே நீக்கப்படும்" என்று தெரிவித்திருக்கிறார். `விஜய் என்பது ஒரு கருவி... நான் நெருப்பு போல வந்திருக்கேன்' - சி.மகேந்திரன் தொடர்ந்து திமுக வெளிநடப்புக்குப் பிறகு பேசிய அவர், "சமூகநிதி அரசு என்று சொன்னவர்களைப் பார்த்து கேட்கிறேன். பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு எத்தனை அமைச்சர் பதவி கொடுத்தீர்கள். ஆனால் நம்முடைய அரசில் எட்டு அமைச்சர்களுக்குப் பதவி கொடுத்திருக்கிறோம். அம்பேத்கரின் 100 ஆண்டு கால கனவு நிறைவேறி இருக்கிறது. எங்கள் அமைச்சரவையில் 4 பெண்களுக்கு அமைச்சர் பதவி கொடுத்திருக்கிறோம். அதனால் மக்களால் அகற்றப்பட்டவர்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்கிறோம். ஊழலே செய்ய மாட்டோம். தப்பே செய்ய மட்டோம் என்று சொல்வதால்தான் கூட்டணி ஆட்சி அமைக்க முன்வருகிறோம். ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்பதைக் கொடுக்க முன்வருகிறோம். உதயநிதி ஸ்டாலின் உரை ஊழலால் ஊறிபோனவர்கள் ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு கொடுக்க முன்வர மாட்டார்கள். கூட்டணி ஆட்சியை மக்கள் விரும்ப மாட்டார்கள் என்று சொல்கிறார்கள். அதே மக்கள்தான் இப்போது அவர்களைப் பார்த்து சிரிக்கிறார்கள். நம் மீது அவதூறு பரப்பியது மட்டும் அல்லாமல், மக்கள் மீதும் அவதூறு பரப்புகிறார்கள். மக்கள் நமக்கு ஓட்டுபோட்டது தப்பாம். 50 வருஷமா ஒரே டெனிக்கா? டெக்னிக்கை மாற்றுங்கள். பிறகு சோஃபா மாடல் ஆட்சியா? அது புரியவே எனக்கு லேட் ஆகிவிட்டது. பர்னிச்சர் பிசினஸ் எல்லாம் வேறு எங்காவது பண்ண சொல்லுங்கள். சட்டசபைக்குள் வேண்டாம். ஆக்கப்பூர்வமான கருத்துக்கள் இருந்தால் சொல்ல சொல்லுங்கள். அதனை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்" என்று பேசியிருக்கிறார். `தம்பி, உங்க அப்பாவதான் தேடிட்டு இருக்கேன்!' - சட்டமன்றத்தில் குட்டி ஸ்டோரி சொன்ன முதல்வர் விஜய்| Live முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Full article — see link below



