விழுப்புரம், சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் 2 சவரன் நகையை மர்ம நபர்கள் பறித்துச்சென்றனர். கடைக்கு சென்றார் திண்டிவனம் அடுத்த வேங்கை கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம் மனைவி கலையரசி (வயது 38). இவர் தற்போது திண்டிவனம் சுரேஷ் பாண்டியன் நகரில் வசித்து வருகிறார். இந்நிலையில் கலையரசி, நேற்று காலை அப்ப குதியில் உள்ள கடைக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். திண்டிவனம் மரக்காணம் ரோடு, நகராட்சி சுடுகாடு அருகே நடந்து சென்றபோது அவ்வழியே மோட்டார் சைக்கிளில் 2 மர்ம நபர்கள் வந்தனர். போலீசார் விசாரணை அப்போது திடீரென மோட்டார் சைக்கிளில் இருந்து திடீரென ஒரு மர்ம நபர் இறங்கி சென்று, கலையரசி கழுத்தில் கிடந்த 2 சவரன் செயினை பறித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கூச்சலிட்டார். இந்த சத் தத்தை கேட்டு அக்கம்பக்கத்தினர் வருவதற்குள் மர்மநபர்கள் வந்த அதே மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் தப்பிச்சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் திண்டிவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருவதுடன், மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/two-sovereigns-of-gold-jewelry-snatched-from-a-woman-walking-on-the-road




