திருநெல்வேலி, திருநெல்வேலி மாவட்டத்தில், இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 91 பேர் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து, தடுப்புக் காவலில் அடைக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது. திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூர் காவல் நிலைய சரகத்தில் கொலை, கொலை முயற்சி, தொடர் தாக்குதல், சொத்துச் சேதம் ஏற்படுத்துதல் மற்றும் குற்றமுறு மிரட்டல் உள்ளிட்ட தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 8 பேர் மீது ஏற்கனவே தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நிலையில், இந்த வழக்குகளில் தொடர்புடைய மேலும் 3 பேர் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலை, கொலை முயற்சி வழக்குகள் திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூர் காவல் நிலைய சரகத்தில் கொலை, கொலை முயற்சி, தொடர் தாக்குதல், சொத்து சேதம் ஏற்படுத்துதல் மற்றும் குற்றமுறு மிரட்டல் உள்ளிட்ட தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 8 பேர் மீது ஏற்கனவே தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்குகளில் தொடர்புடைய சரித்திர பதிவேடு குற்றவாளிகளான திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டம், மூலச்சி பகுதியைச் சேர்ந்த சுடலை(எ) அருள் (வயது 22), விஜயகுமார்(22) மற்றும் சுப்பையா(எ) தங்கதுரை(27) ஆகிய 3 பேரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் மேற்சொன்ன நபர்கள் 3 பேரும் தொடர் சட்டவிரோத குற்றச்செயல்களில் ஈடுபட்டு, பொதுமக்களை அச்சுறுத்தி வந்ததால் சேரன்மகாதேவி டி.எஸ்.பி., மேற்சொன்ன 3 பேர் மீதும் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்குமாறு திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி.யிடம் பரிந்துரை செய்தார். 3 பேர் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தில் கைது அதன்பேரில் திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. விஷ்வேஷ் பா.சாஸ்திரி பரிந்துரையின்படி, திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் ஆனந்த் மோகன் பிறப்பித்த தடுப்புக் காவல் உத்தரவின்பேரில், மேற்சொன்ன 3 பேரும் நேற்று தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதுவரை 91 பேர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது திருநெல்வேலி மாவட்டத்தில், இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 91 பேர் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து, தடுப்புக் காவலில் அடைக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/91-people-have-been-arrested-under-the-detention-act-in-nellai-so-far-this-year




