ஷோபு எர்லகடா, எஸ்.எஸ்.கார்த்திகேயா தயாரிப்பில் சஷாங்க் எலேட்டி இயக்கத்தில் பகத் பாசில் நடித்துள்ள புதிய படம், 'டோண்ட் டிரபிள் தி டிரபிள்'. இதில் சாரா என்ற சிறுமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் திரைக்கு வருகிறது. இந்த புதிய படம் குறித்து பகத் பாசில் கூறும்போது, "ஒரு மனிதன் பேயை கடத்தினால் என்ன ஆகும்? என்ற கதை. அனைத்து வயதினரும் ரசித்து பார்க்கலாம். இதுவரை தெலுங்கில் எனக்கு பெரியளவில் 'ஓபனிங்' இல்லை. இந்தப் படம் மூலம் தெலுங்கிலும் என் செல்வாக்கு உயரும் என்று நம்புகிறேன்” என்றார். இதையடுத்து உங்களுக்கு எந்த கதாபாத்திரம் செட் ஆகிறது. வில்லனா. ஹீரோவா? என்ற கேள்விக்கு, "நான் ஒரு நடிகன். எதிலும் என்னால் சிறப்பாக நடிக்க முடியும். நீங்கள் என்னை ஒரு நல்ல நடிகனாக பாருங்கள்" என்று பதிலளித்தார். பெரியளவில் கதாநாயகிகளுடன் இணைந்து நடிக்க மாட்டேங்கிறீர்களே. உங்களுடன் நடிக்க கதாநாயகிகள் பயப்படுகிறார்களா? என்ற கேள்விக்கு, "அப்படி எல்லாம் ஒன்றுமில்லை. எனக்கு இணையாக நடிக்க அவர்களுக்கு நேரம் இல்லையோ. என்று நினைக்கிறேன். எல்லாவற்றுக்கும் இந்த இயக்குனர்கள் தான் காரணம்" என்று கலகலப்பாக பதிலளித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/cinema/cinemanews/are-heroines-afraid-to-act-with-me-fahadh-faasil-answers




