சென்னை, மதுராந்தகத்தில் திருடப்பட்ட மரகத பாலமுருகன் தண்டாயுதபாணி சுவாமி சிலை மீட்கப்பட்டது. இது குறித்து, தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- சுவாமி சிலை திருட்டு செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் உட்கோட்டம், சித்தாமூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெருங்கரணை கிராமத்தில் உள்ள நடுபழனி பாலமுருகன் மரகத தண்டாயுதபாணி திருக்கோவிலில். 01.09.2026 அன்று இரவு மர்ம நபர்களால் 2.5 அடி உயரமுள்ள மரகத பாலமுருகன் தண்டாயுதபாணி சுவாமி சிலை மற்றும் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்டன. மேற்படி சம்பவம் தொடர்பாக, உடனடியாக சித்தாமூர் காவல் நிலைய குற்ற 6.245/2026 u/s 331(4), 305(d) BNS ல் வழக்கு பதிவு செய்யப்பட்டு. ஆதாரங்களின் அடிப்படையில், குற்றவாளிகளை விரைந்து கண்டறிந்து கைது செய்ய செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால், மேற்பார்வையில், மதுராந்தகம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் தீபக் ரஜினி தலைமையில் 6 காவல் ஆய்வாளர்களை கொண்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு. 100-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தும். மீட்பு வழக்கமாக இவ்வகையான குற்ற செயல்களில் ஈடுபடும் பழங்குற்றவாளிகள் மேற்பட்ட 20-க்கும் பழங்குற்றவாளிகளை விசாரித்தும், குற்றவாளிகளை அடையாளம் கண்டு இன்று சித்தாமூர் காவல் ஆய்வாளர் மகாலிங்கம் தலைமையில் 3 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு திருடப்பட்ட மரகத பாலமுருகன் தண்டாயுதபாணி சுவாமி சிலை மீட்கப்பட்டுள்ளது. பாராட்டு மேலும், இவ்வழக்கின் சட்டப்படியான புலன் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்பதை தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. மேலும், மகேஷ் குமார் அகர்வால், காவல்துறை தலைமை இயக்குநர்/ படைத்தலைவர், தனிப்படை காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களை வெகுவாக பாராட்டினார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/maduranthakam-stolen-emerald-idol-recovered-3-arrested




