வாஷிங்டன், 4வது மேஜர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் அமெரிக்காவில் கடந்த மாதம் 18 தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தொடரில் 6 அணிகள் பங்கேற்றுள்ளன. இதில் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும். சான் பிரான்சிஸ்கோ - சியாட்டில் இந்நிலையில், மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 28வது லீக் ஆட்டத்தில் சான் பிரான்சிஸ்கோ யூனிகான்ஸ் - சியாட்டில் ஓர்காஸ் அணிகள் மோதின. டெல்லஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சான் பிரான்சிஸ்கோ முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. சான் பிரான்சிஸ்கோ வெற்றி இதையடுத்து களமிறங்கிய சியாட்டில் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 190 ரன்கள் குவித்தது. அந்த அணியின் மேத்திவ் பிரிட்ஸ்கெ அதிகபட்சமாக 29 பந்துகளில் 55 ரன்கள் குவித்தார். இதையடுத்து 191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்குடன் களமிறங்கிய சான் பிரான்சிஸ்கோ 19 ஓவரில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 194 ரன்கள் சேர்த்தது. இதன் மூலம் சியாட்டில் ஓர்காசை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சான் பிரான்சிஸ்கோ யூனிகான்ஸ் அபார வெற்றிபெற்றது. சிறப்பாக ஆடிய சான் பிரான்சிஸ்கோ அணியின் தொடக்க வீரர் பின் ஆலன் 31 பந்துகளில் 65 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/sports/cricket/major-league-cricket-san-francisco-unicorns-beats-seattle-orcas




