Full Article
கடந்த ஆண்டு நடந்த பஹல்காம் தாக்குதலையொட்டி, இந்திய அரசு பாகிஸ்தான் உடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்தது. சிந்து நதி நீர் என்பது பாகிஸ்தானுக்கு மிக மிக முக்கியம். இதை வைத்து தான் பாகிஸ்தான் பஞ்சாப் மற்றும் சிந்து பகுதிகளில் விவசாயம் செய்து வருகிறது. சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதால், பாகிஸ்தானுக்கு செல்லும் நீர் தடைப்பட்டிருக்கிறது. இதை நீண்ட காலத்திற்கு பாகிஸ்தானின் விவசாயமும், பொருளாதாரமும் தாங்கிக்கொள்ள முடியாது. இதனால், பாகிஸ்தானில் இருந்து இப்போது குரல் எழுந்திருக்கிறது. பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப்திருவள்ளூர் இறால் தொழிற்சாலை அமோனியா கசிவு: உயிரிழப்பு எண்ணிக்கை 4 ஆக உயர்வு; மூவர் கைது! பாகிஸ்தான் என்ன சொல்கிறது? பாகிஸ்தானின் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப் பேட்டி ஒன்றில், "எப்போது நமது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறதோ - தண்ணீரும் நமது தேசிய பாதுகாப்பின் ஒரு பகுதிதான். அந்தக் கணமே நாம் இந்தியாவுக்கு எதிராகப் போருக்குச் செல்வோம். இது உறுதி. இந்தியா நீரை ஆயுதமாகப் பயன்படுத்துகிறது" என்று குற்றம் சாட்டியிருக்கிறார். இந்தியாவின் நிலைப்பாடு பாகிஸ்தான் தனது எல்லையைத் தாண்டிய பயங்கரவாதக் கட்டமைப்புகளை அழிப்பதற்கு நம்பகமான, உறுதியான நடவடிக்கைகளை எடுக்கும் வரை இந்த ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் என்பதில் இந்திய அரசு தெளிவாக இருக்கிறது. சட்டமன்றம்: `இணைந்தும், இணையாமலும்' வெளிநடப்பு செய்த அதிமுகவினர்; உள்ளே வேலுமணி - வெளியே எடப்பாடி | Live News Updates முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Full article — see link below



