வாஷிங்டன், 4வது மேஜர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் அமெரிக்காவில் கடந்த மாதம் 18 தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 6 அணிகள் பங்கேற்ற இத்தொடரில் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்துள்ள சான் பிரான்சிஸ்கோ, லாஸ் ஏஞ்சல்ஸ், நியூயார்க், வாஷிங்டன் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. வாஷிங்டன் - நியூயார்க் இந்நிலையில், மேஜர் லீக் கிரிக்கெட்டில் நாளை நடைபெறும் எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் வாஷிங்டன் பிரிடம் - எம்.ஐ. நியூயார்க் அணிகள் மோத உள்ளன. இந்திய நேரப்படி காலை 7 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது. புள்ளிப்பட்டியலில் 3வது, 4வது இடத்தில் உள்ள அணிகள் எலிமினேட்டர் சுற்றில் மோத உள்ளன. இந்த ஆட்டத்தில் வெற்றிபெறும் அணி குவாலிபையர் 2 சுற்றுக்குள் நுழையும். குவாலிபையர் 1 சுற்றில் தோல்வியடைந்த அணியுடன் எலிமினேட்டர் சுற்றில் வெற்றிபெற்ற அணி குவாலிபையர் 2 சுற்றில் மோதும். குவாலிபையர் 2 சுற்றில் வெற்றிபெறும் அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும். இதனால் நாளை நடைபெற உள்ள எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது என ரசிகர்கள் கருதுகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/sports/cricket/washington-freedom-vs-mi-new-york-eliminator-in-major-league-cricket




