சென்னை, தமிழக பாஜக மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- கும்பகோணம் பள்ளி தீ விபத்தின் 22-ஆம் ஆண்டு நினைவு நாளில், உயிரிழந்த 94 பிஞ்சுக் குழந்தைகளுக்கு ஆழ்ந்த இதய அஞ்சலிகள். தமிழக வரலாற்றில் என்றும் அழியாத பெருந்துயரமாகப் பதிந்த இந்தச் சம்பவம், பள்ளிகளில் பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்படாதால் ஏற்படும் பேராபத்தின் கோர நினைவாக உள்ளது. வலியுறுத்தல் இத்தகைய துயரங்கள் இனி ஒருபோதும் நிகழாத வகையில், அனைத்து கல்வி நிலையங்களும் தீயணைப்பு மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளை முறையாகக் கடைப்பிடித்து, மாணவர்களின் உயிர் பாதுகாப்பை முதன்மையாகக் கருதி செயல்பட வேண்டும் என்பதை இந்த நாளில் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கும்பகோணம் பள்ளி தீ விபத்தின் 22-ஆம் ஆண்டு நினைவு நாளில், உயிரிழந்த 94 பிஞ்சுக் குழந்தைகளுக்கு ஆழ்ந்த இதய அஞ்சலிகள். தமிழக வரலாற்றில் என்றும் அழியாத பெருந்துயரமாகப் பதிந்த இந்தச் சம்பவம், பள்ளிகளில் பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்படாதால் ஏற்படும் பேராபத்தின் கோர நினைவாக… — Vanathi Srinivasan (@VanathiBJP) July 16, 2026 முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/fire-tragedy-anniversary-vanathi-srinivasan-pays-tribute




