கோவை, மதுரை அருகே ரெயில் தண்டவாள பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதனால் பாலக்காடு-திருச்செந்தூர் ரெயில்(எண்: 16731) பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இதுகுறித்து சேலம் ரெயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:- மதுரை அருகே ரெயில் பாதையில் பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதன் காரணமாக பாலக்காடு-திருச்செந்தூர் ரெயில் (எண்: 16731) வருகிற 15, 18, 21, 24, 27, 31 ஆகிய தேதிகளில் வாஞ்சி மணியாச்சி-திருச்செந்தூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. மேலும் 10-ந் தேதி பாலக்காடு-திருச்செந்தூர் ரெயில் (எண்: 16731) மதுரையில் இருந்து திருப்பரங்குன்றம், திருமங்கலம் நிலையங்களுக்கு செல்லாமல் மானாமதுரை, விருதுநகர் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/palakkad-tiruchendur-train-partially-cancelled




