பனஜி, சுற்றுலாத் தலமான கோவாவிற்கு பயணம் மேற்கொண்ட பெண் ஒருவர், அங்கு வாழ்வாதாரத்தை இழந்து தவித்த ஒரு அறிமுகமில்லாத நபருக்கு நிதியுதவியும், உணவும் வழங்கி உதவிய நெகிழ்ச்சியான சம்பவம் சமூக வலைதளங்களில் பலரது பாராட்டுகளைப் பெற்று வருகிறது. சுற்றுலாப் பயணம் பெங்களூரைச் சேர்ந்தவர் நிஸ்சிதா நரேன். இந்த பெண் அண்மையில் கோவாவிற்கு சுற்றுலா சென்றிருந்தார். அங்கிருந்த செக்யூரிட்டி காவலர் ஒருவரிடம் அவர் சாதாரணமாக பேசத் தொடங்கியபோது, அந்த நபரின் சோகமான பின்னணி தெரியவந்தது. மகாராஷ்டிராவைச் சேர்ந்த அந்த நபர், கோவாவில் ஒரு சுயதொழில் தொடங்கும் நோக்கில் வந்துள்ளார். ஆனால், எதிர்பாராதவிதமாக அதில் ஒட்டுமொத்தப் பணத்தையும் இழந்து, பெரும் நஷ்டத்தைச் சந்தித்து, வேலையும் இல்லாமல் தவித்துள்ளார். உணர்ச்சிப்பூர்வமான உரையாடல் தன் நிலையை நினைத்துக் கண்ணீர் வடித்த அந்த நபர் நிஸ்சிதாவிடம் பேசுகையில், "வாழ்க்கை சில சமயங்களில் அனைவருக்கும் கடினமாகத்தான் இருக்கும்" என்று உணர்ச்சிவசப்பட்டுக் கூறியுள்ளார். மேலும், தனது கஷ்டங்களை மறந்து, "உங்களது கோவா பயணத்தை நீங்கள் மகிழ்ச்சியாக அனுபவியுங்கள். ஆனால், என்னை மறந்துவிடாதீர்கள்" என்று உருக்கமாகக் கேட்டுக்கொண்டுள்ளார். செய்த உதவி அறிமுகமில்லாத நபரான அவர் இக்கட்டான சூழ்நிலையிலும் காட்டிய பக்குவத்தைக் கண்டு நெகிழ்ந்த நிஸ்சிதா, அவருக்கு உடனடியாக உணவு வாங்கிக் கொடுத்தார். அதுமட்டுமின்றி, அவர் மீண்டும் மகாராஷ்டிராவில் உள்ள தனது சொந்த ஊருக்கு திரும்பிச் செல்வதற்காக, ரெயில் டிக்கெட் எடுப்பதற்கான நிதியுதவியையும் வழங்கினார். இன்ஸ்டாவில் பதிவு- பாராட்டுகள் தொடர்ந்து, இந்த நெகிழ்ச்சியான சந்திப்பை வீடியோவாகப் பதிவு செய்து, "எல்லா பயணங்களும் கடற்கரைகளை ரசிப்பதற்காக மட்டுமே அமைவதில்லை. சில நேரங்களில் கடவுள் நமது பாதையில் அனுப்பும் மனிதர்களைப் பற்றியதாகவும் அது மாறுகிறது" என்ற குறிப்புடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், நிஸ்சிதாவின் இந்த மனிதாபிமான செயலுக்கு நெட்டிசன்கள் தங்களது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் குவித்து வருகின்றனர். View this post on Instagram முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/india/tourist-provided-financial-assistance-to-a-person-who-lost-their-job




