தூத்துக்குடி, தூத்துக்குடியில் கடத்தி வரப்பட்ட ரூ.1 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள், காரை பறிமுதல் செய்த போலீசார், காரில் இருந்த ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 2 வாலிபர்களை கைது செய்தனர். போலீசார் வாகன சோதனை தூத்துக்குடி தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜா மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகப்படும்படி வந்த ஒரு காரை மடக்கி சோதனை செய்தனர். அந்த சோதனையில் தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், கூல்பேட் உள்ளிட்டவை பண்டல்களாக இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். ரூ.1 லட்சம் புகையிலை பொருட்கள், கார் பறிமுதல், 2 பேர் கைது இதில் மொத்தம் 150 கிலோ 250 கிராம் எடையுள்ள புகையிலை பொருட்கள் இருந்தது. இதன் மதிப்பு ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்து 500 ஆகும். இந்த பொருட்களை காருடன் பறிமுதல் செய்து அதில் இருந்த இரண்டு பேரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர் விசாரணையில் ராஜஸ்தான் மாநிலம் காளி பல்காரா பகுதியை சேர்ந்த அட்மன் ராம் மகன் வீரேந்திர பிஸ்னெய் (24) பாரத்சிங் மகன் பிரேம் சிங் (21) ஆகிய இரண்டு பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/tobacco-products-worth-rs1-lakh-car-seized-2-youths-from-northern-state-arrested




