தேனி, கண்டமனூர் அருகே விவசாயி தோட்டத்தில் கட்டப்பட்டிருந்த ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள பசுமாட்டை திருடி சென்ற வாலிபரை போலீஸார் கைது செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்திய சரக்கு வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. பசுமாடு திருட்டு தேனி மாவட்டம் கண்டமனூர் அருகே உள்ள ஜி.இராமலிங்கபுரத்தை சேர்ந்தவர் சதாராம் (வயது 43). இவர் எரதிமக்காள் பட்டி செல்லும் சாலையில், பாலாஜி பள்ளிக்கு எதிரே தனக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். அங்கு கொட்டகை அமைத்து பசுமாடுகளையும் வளர்த்து வருகிறார். கடந்த 9-ஆம் தேதி மாலை மாடுகளில் பால் கறந்துவிட்டு, இரண்டு மாடுகளை கொட்டகையில் கட்டிப்போட்டுவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். மறுநாள் காலை வந்து பார்த்தபோது, அதில் சுமார் ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள ஒரு பசுமாடு மட்டும் காணாமல் போயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். சிசிடிவி ஆய்வு மர்ம நபர்கள் யாரோ பசுமாட்டை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து சதாராம் கண்டமனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தபோது, மாட்டை சரக்கு வாகனத்தில் ஏற்றி கடத்தி சென்றது தெரியவந்தது. சிறையில் அடைப்பு இதையடுத்து, க.விலக்கு அருகே உள்ள பாலசமுத்திரத்தை சேர்ந்த சக்திவேல் மகன் தமிழ்பாரதி (27) என்பவரை போலீஸார் நேற்று கைது செய்தனர். மாட்டை திருடுவதற்கு அவர் பயன்படுத்திய சரக்கு வாகனத்தையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.கைது செய்யப்பட்ட தமிழ்பாரதியை போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-arrested-for-stealing-cow-from-farmers-house-truck-seized




