ஆரோக்கியமாக இருப்பதாக உணர்ந்தாலும் கவனிக்க வேண்டிய அறிகுறிகள்உடலில் பெரிய உடல்நல பிரச்சினைகள் வெளிப்படுவதற்கு முன்பே, சில நுட்பமான அறிகுறிகள் வெளிப்பட தொடங்கும். ஆரோக்கியமாக இருப்பதை போல் உணர்ந்தாலும் தொடர்ந்து உடலில் ஏற்படும் சில மாற்றங்கள் உடல் நலத்தில் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டும். அத்தகைய அறிகுறிகள் பற்றி பார்ப்போம். 1.இரவில் போதுமான நேரம் தூங்கிய பிறகும் தொடர்ந்து சோர்வாகவோ, உடலில் ஆற்றல் இல்லாமலோ உணர்ந்தால், தைராய்டு பிரச்சினை, ரத்தச்சோகை, சில வைட்டமின் குறைபாடுகள், நீண்டகால மன அழுத்தம் அல்லது தூக்கத்தின் தரம் குறைதல் போன்றவை காரணமாக இருக்கலாம். எனவே காரணம் தெரியாமல் உடல் சோர்வு நீடித்தால் அதை அலட்சியப்படுத்தாமல் கவனிப்பது நல்லது. 2.வயிறு உப்புசம், வாயுத்தொல்லை, மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகள் அடிக்கடி ஏற்பட்டால் உணவில் நார்ச்சத்து குறைவாக இருக்கக்கூடும்.சில உணவுகளை உடல் ஏற்றுக்கொள்ளாமல் இருக்கலாம். செரிமான பிரச்சினைகளும் அதற்கு காரணமாக இருக்கலாம். உடல் நிலை நன்றாக இருப்பது போல் உணர்ந்தாலும் தொடர்ந்து செரிமானக்கோளாறுகள் ஏற்பட்டால் அதற்கான காரணத்தை கவனிக்க வேண்டும். 3.உடலில் நீர்ச்சத்து குறைதல், தாமதமாக உணவு உட்கொள்ளுதல் போன்ற காரணங்களாலும் சிலருக்கு மீண்டும் மீண்டும் தலைவலி வரலாம். பார்வைக் குறைபாடு உள்பட பல்வேறு காரணங்களாலும் தலைவலி, ஒற்றை தலைவலி உண்டாகலாம். தொடர்ந்து கடுமையான தலைவலி ஏற்பட்டால் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது 3.அமைதியாக ஓய்வில் இருக்கும்போதும் வழக்கத்தைவிட இதயத்துடிப்பு தொடர்ந்து அதிகமாக இருந்தால் உடற்பயிற்சியின்மை, மன அழுத்தம், நீர்ச்சத்து குறைதல், காய்ச்சல், சில மருந்துகளை உட்கொள்ளுதல் அதற்கு காரணமாக இருக்கலாம். தொடர்ந்து வழக்கத்திற்கு மாறாக இதயத்துடிப்பு அதிகமாக இருந்தால், குறிப்பாக நெஞ்சுவலி, மூச்சுத்திணறல், மயக்கம் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவரை அணுகுவது அவசியமானது 4. இரவு தூக்கத்தில் அடிக்கடி விழித்துக்கொள்வது அல்லது காலையில் எழுந்தவுடன் சோர்வாக இருப்பது ஆழ்ந்த தூக்கத்தை பெறவில்லை என்பதன் வெளிப்பாடாக அமையும். தூக்கத்தில் மூச்சுத்திணறல், பதற்றம், சரியான நேரத்தில் தூங்காத நிலை போன்றவை அதற்கு காரணமாக இருக்கலாம். தொடர்ந்து தூக்கம் தடைப்பட்டால் அதற்கான காரணத்தை கண்டறிந்து சரிசெய்வது முக்கியமானது. 5. உணவு அல்லது உடற்பயிற்சி முறையில் குறிப்பிடத்தக்க மாற்றம் இல்லாமலேயே திடீரென உடல் எடை அதிகரிப்பது அல்லது குறைவது கவனிக்க வேண்டிய அறிகுறியாகும். தைராய்டு செயல்பாட்டில் மாற்றம், பிற ஹார்மோன்கள் அல்லது வளர்சிதை மாற்ற பிரச்சினைகள், மன அழுத்தம் போன்றவை இதற்கு காரணமாக இருக்கலாம். எதிர்பாராதவிதமாக உடல் எடையில் மாற்றம் தொடர்ந்து ஏற்பட்டால் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/sirappukatturaigal/stay-alert-if-you-notice-these-10-signs-in-your-bodywhich-ailments-should-not-be-ignored




