இந்திய அளவில் கிராமங்களில் உள்ள அரசு பள்ளிகளை மேம்படுத்தும் வகையில் தேசியஅளவிலான பிரசாரத்தை கடந்த வாரம் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜீத் தீப்கே தொடங்கி உள்ளார். இதன் ஒரு பகுதியாக மராட்டிய மாநிலம் லத்தூரின் அவுசா தாலுகாவில் உள்ள உஜானி கிராமத்தில் உள்ள ஒரு மாவட்ட பஞ்சாயத்து பள்ளியை பார்வையிட்டார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- அரசியல் கட்சிகளின் தலைவர்களை முதலில் கல்விக்காக பணியாற்றவும், பின்னர் வாக்கு கேட்க வரவும் மக்கள் கட்டாயப்படுத்த வேண்டும். அரசியல் தலைவர்கள் மாணவர்களுக்காக எதுவும் செய்யாதபோது, மக்கள் ஏன் அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும்? தங்கள் குழந்தைகள் என்ன நிலையில் படிக்கிறார்கள் என்பதை மக்கள் பார்க்க வேண்டும். மந்திரிகளின் நாய்களுக்கு இதைவிட சிறந்த வசதிகள் கிடைக்கின்றன.பள்ளிகளின் நிலைமைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளும், மந்திரிகளும் பொறுப்பேற்க வேண்டும். பல பள்ளிகளில் முறையான வகுப்பறைகள், இருக்கைகள், கழிப்பறைகள் மற்றும் பாதுகாப்பான அணு குசாலைகள் போன்ற அடிப்படை வசதிகள் இன்னும் இல்லை. சில பள்ளி களில் மாணவர்கள் விலங்குகளை விட மோசமாக நடத்தப்படுகின்றனர். அரசு என்ன சாதித்துள்ளது? தங்கள் கிராமத்திற்கு வரும் தலைவர்களிடம் கல்விக்காக பணியாற்ற சொல்ல வேண்டும். மதம் ஆபத்தில் இருப்பதாக இவர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். மதம் எங்கும் சென்றுவிடாது. ஆனால் குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படலாம். தாதா பூசே பள்ளிக்கல்வி மந்திரியாக பதவியில் தொடரக்கூடாது என்று எனக்கு தோன்றுகிறது. அரசு பள்ளிகளை மேம்படுத்துவதன் அவசரத்தை அரசாங்கம் புரிந்து கொள்ள விரும்பினால் மந்திரிகளும், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளும் தங்கள் சொந்த குழந்தைகளை இந்த பள்ளிகளில் படிக்க அனுப்ப வேண்டும். பல ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தபோதிலும், ஆளும் அரசாங்கம் அரசு பள்ளிகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை கொண்டுவர தவறிவிட் டது. 10 ஆண்டுகளில் இந்த அடிப்படை பிரச்சினைகளை தீர்க்க முடிய வில்லை என்றால், அரசு என்ன சாதித்துள்ளது. பள்ளிகளில் பாம்புக்கடி யால் குழந்தைகள் இறப்பது போன்ற சம்பவங்கள், கல்விக்கான பாதுகாப் பான அணுகலை உறுதி செய்வதில் அதிகாரிகள் தோல்வி அடைந்துள் ளதை அம்பலப்படுத்துகின்றன. அரசு பள்ளிகளின் நிலையை மேம்படுத்த அரசாங்கம் தவறினால், கிராமங்கள் முழுவதும் பரவலான போராட்டங்கள் வெடிக்கக்கூடும்' என்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/india/government-schools-are-in-a-deplorable-state-abhijit-dipke-alleges




