திருவள்ளூர், மனைவியை அபகரித்துவிட்டதாக திருத்தணி தவெக செயலாளர் மீது எஸ்.பி. அலுவலகத்தில் கணவர் புகார் அளித்தார். நகை கேட்டு மிரட்டுவதாக பெண் பரபரப்பு குற்றம்சாட்டி உள்ளார். மனைவியை அபகரித்த திருத்தணி த.வெ.க.மேற்கு மாவட்ட செயலாளர் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்ககோரி கணவரும், மனைவியும் மாறி, மாறி திருவள்ளூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருத்தணி அடுத்த தெக்கலூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரதாப். இவருக்கும் தீபா என்பவருக்கும் கடந்த 2018ஆம் ஆண்டு இரு வீட்டார் சம்மதத்துடன் திருப்பதியில் திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு 6 வயதில் குழந்தை உள்ளது. பிரதாபுக்கு வேறொரு பெண்ணிடம் தொடர்பு இருப்பதாலும் மனைவி தீபாவுக்கும் வேறொருவருடன்தொடர்பு இருப்பதாக கூறியும் இருவரும் கருத்து வேறு பாட்டால் பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் தீபா கணவனை பிரிந்து குழந்தையுடன் திருத்தணியில் தன் தாய் வீட்டில் தனியாக நான்கு வருடங்களாக வசித்து வருகிறார். தீபா திருத்தணி பகுதியைச் சேர்ந்த திருமணமான த.வெ.க. மேற்கு மாவட்ட செயலாளர் டில்லிபாபு உடன் பல்வேறு இடங்களில் சுற்றி வருவதும் பிரதாப்புக்கு தெரிய வந்துள்ளது. தீபா தாய் வீட்டில் தனியாக வசித்து வரும் போது டில்லி பாபு வீட்டிற்குச்சென்று வருவதும் அவருடன் இருப்பதும், அவருடன் மெரினா பீச், திருவண்ணாமலை, திருப்பதி கோவிலுக்கு சென்று வரும் போட்டோ வீடியோக்ககள் கணவர் பிரதாப்புக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. இந்நிலையில் நேற்று மாவட்ட செயலாளர் டில்லி பாபு உடன் தீபா திருப்பதி கோவிலுக்கு சென்று இருப்பதாக கணவர் பிரதாப்புக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து திருப்பதிக்கு சென்ற பிரதாப் மனைவியுடன் சுற்றி வரும் டில்லி பாபுவிடம் தகராறு செய்தார். இருவரும் தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. டில்லிபாபுவும் தீபாவும் இணைந்து கொலை செய்து விடுவதாகவும் மிரட்டுவதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து தன் குழந்தையை தன்னிடம் மீட்டு தர வேண்டுமென பிரதாப் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். இதனை அறிந்த தீபா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்து தன் கணவர் பிரதாப் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்து வந்ததால் அவரிடம் பிரிந்து நான்கு வருடங்களாக திருத்தணியில் தனது தாய் வீட்டில் வசித்து வருவதாகவும் தான் உறவினர்கள் நண்பர்கள் உடன் பேசுவதை தவறாக சித்தரித்து கணவர் பேசி வருவதாகவும் தனக்கு திருமணத்திற்கு போட்ட 60 சவரன் நகையை அவர் விற்று பல்வேறு பெண்களிடம் உல்லாசமாக இருந்து வந்ததாகவும் தவெக மாவட்ட செயலாளர் டில்லி பாபுவுக்கும் தனக்கும் எந்த கள்ளத்தொடர்பும் இல்லை என்றும் அவர் தனது குடும்ப நண்பர் என்றும் அவர் விஜய் கட்சியில் மாவட்ட செயலா ளராக இருந்து வருவதால் விஜய் ரொம்ப பிடிக்கும் என்பதால் அவருடன் கட்சியில் இருந்து வருவதாக விளக்கம் தெரிவித்துள்ளார். கணவர் பிரதாப் 50 சவரன் நகை கொடுத்தால் அவதூறு பரப்பதை நிறுத்தி விடுவதாக கூறுவதாகவும், இல்லை யென்றால் தன்னையும் குழந்தையையும் கொலை செய்து விடுவேன் என மிரட்டுவதாகவும் இதனால் தன் குழந்தைக்கும் தனக்கும் போலீசார் பாதுகாப்பு அளித்து அவர் மீது நடவ டிக்கை எடுக்கவேண்டும் என தீபா மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். இந்நிலையில் தீபா மீதும் தவெக மாவட்ட செயலாளர் டில்லி பாபு மீதும் நடவடிக்கை எடுக்கும் படி கணவர் புகார் அளித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/illegal-relationship-with-thawekas-secretary-flirting-with-many-women-husband-and-wife-take-turns-complaining-creating-a-stir




