சென்னை, ரேஷன் கடைகளுக்கு அரிசி மூட்டைகள் எடை குறைவாக வருவதால் பணியாளர்கள் வேதனை அடைந்துள்ளனர். எடை குறைவாக வழங்கப்படும் அரிசி தமிழகத்தில் உள்ள பெரும்பாலான ரேஷன் கடைகளில், பொதுமக்களுக்கு உரிய எடையில் அரிசி வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக உள்ளது. ஆனால், இதுகுறித்து ரேஷன் கடை பணியாளர்களிடம் கேள்வி கேட்டால், "எங்களுக்கே அரிசி மூட்டை எடை குறைவாகத்தான் வருகிறது. அப்படி இருக்கும்போது, உரிய எடையில் எப்படி பொதுமக்களுக்கு அரிசியை வழங்க முடியும்" என்று வருத்தம் தெரிவித்தனர். சமீபத்தில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள நெல் அரவை ஆலைகளில் பல கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அதற்கு காரணமான அரசு அதிகாரிகளும் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர். தரமில்லாத அரிசி 50 கிலோ எடை கொண்ட அரிசி மூட்டையின் அளவு ஒரு பக்கம் குறைகிறது என்றால், மற்றொரு பக்கம் தரமான அரிசியாக இருப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது. அதாவது, "நல்ல தரமான அரிசியை வெளிச்சந்தைக்கு திருப்பி விட்டுவிட்டு, தரமில்லாத, பழைய அரிசியை ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்படுகிறது. அதுவும் எடை குறைவாகவே வழங்கப்படுகிறது" என்ற புகார் பல ஆண்டுகளாக உள்ளது. அரசுக்கு கோரிக்கை அதனால், நெல் கொள்முதலில் தொடங்கி நெல் அரவை, கிடங்கு, போக்குவரத்து, ரேஷன் கடை என முழு விநியோக சங்கிலியையும் கண்காணிக்க வேண்டும் என்று பொதுமக்கள் அரசுக்கு குறிப்பாக உணவுத்துறை அமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/rice-sacks-arriving-at-ration-shops-are-underweight-staff-distressed




