விஷால் இயக்கி நடித்துள்ள ‘மகுடம்’ படம் ஆகஸ்ட் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஷால், தற்போது ‘மகுடம்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக துஷாரா விஜயன் நடிக்க, நடிகை அஞ்சலி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. சூப்பர் குட் பிலிம்ஸின் 99-வது படம் இயக்குநர் ரவி அரசு இயக்கத்தில் தொடங்கப்பட்ட ‘மகுடம்’ படத்தின் படப்பிடிப்பின்போது ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால், பின்னர் படத்தின் இயக்கப் பொறுப்பை நடிகர் விஷால் ஏற்றுக்கொண்டார். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை கடந்த தீபாவளி அன்று வெளியிட்ட அவர், படத்தின் போஸ்டரில் “கதை – ரவி அரசு, திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கம் – விஷால்” என்று குறிப்பிட்டிருந்தார். சூப்பர் குட் பிலிம்ஸின் 99-வது படமாக உருவாகும் ‘மகுடம்’ படத்தின் மூலம் விஷால் இயக்குநராக அறிமுகமாகிறார். கவனம் பெற்ற கிளைமேக்ஸ் மற்றும் டீசர் இதனிடையே, படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகள் 17 இரவுகள் தொடர்ந்து படமாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சமீபத்தில், அந்த கிளைமேக்ஸ் காட்சிகளின் மேக்கிங் வீடியோவை விஷால் தனது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டிருந்தார். அந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும், விரைவில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள ‘மகுடம்’ திரைப்படத்தின் டீசரும் சமீபத்தில் வெளியாகி, படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இப்படத்தில் விஷால் கேங்ஸ்டராக நடித்துள்ளார். இயக்குநராகும் தனது 30 ஆண்டுகால கனவு இப்படத்தின் மூலம் நிறைவேறியதாக விஷால் கூறியிருந்தார். பாடல்கள் வெளியானது சமீபத்தில் ‘மகுடம்’ படத்தின் ‘ரைஸ் ஆப் லிங்கா’ எனும் முதல் பாடலை படக்குழுவினர் வெளியிட்டனர். இப்படத்தின் ‘நச்சிந்தி மச்சானே’ பாடலை பாடலை ஏகாதசி வரிகளில் மங்லி, வேல்முருகன் இணைந்து பாடியுள்ளனர். இப்படத்தின் ‘கலங்காதே’ பாடலை கருணாகரன் வரிகளில் ஜி.வி. பிரகாஷ் இசையமைத்து பாடியுள்ளார், படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு இந்நிலையில், இத்திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. ஏற்கனவே அதே நாளில், சூர்யா நடித்துள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’ மற்றும் நயன்தாரா - கவின் இணைந்து நடித்துள்ள ‘ஹாய்’ திரைப்படங்கள் வெளியாக உள்ளன.தற்போது இந்த பாக்ஸ் ஆபீஸ் மோதலில் விஷாலின் ‘மகுடம்’ படமும் இணைந்திருப்பது பெரும் எதிர்பார்பை ஏற்படுத்தி உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/cinema/cinemanews/vishals-magudam-film-release-date-announced




