தூத்துக்குடி, தூத்துக்குடி ராஜபாண்டி நகரை சேர்ந்தவர் வேல்முருகன், இவரது மகன் அஜித்குமார் என்ற கருப்பு அஜித் (வயது 28). இவரது நண்பரான கபில்தேவ் (27) ஆகியோரும் ஆயுதங்கள் வைத்து இருந்ததாக கடந்த 2 நாட்களுக்கு முன்பு தென்பாகம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்கள் 2 பேரும் தங்களது வீட்டில் கஞ்சா எதுவும் பதுக்கி வைத்து இருக்கலாம் என போலீசார் சந்தேகம் அடைந்தனர். எனவே தனிப்படை போலீசார் நேற்று கபில்தேவ் மற்றும் அஜித்குமாரின் வீடுகளில் சோதனை நடத்தினர். அஜித்குமாரின் மனைவி, மாமியார் வசித்து வந்த அண்ணாநகர் 10-வது தெருவில் உள்ள வீட்டிலும் திடீர் சோதனை நடத்தினர். நாட்டு வெடிகுண்டுகள் அப்போது, வீட்டின் வெளிப்புறத்தில் ஒரு பை இருந்தது. அந்த பையை திறந்து பார்த்தபோது கஞ்சா இருக்கும் என கருதிய நிலையில், 8 நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். உடனே வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு மற்றும் செயலிழப்பு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் தகுந்த உபகரணங்களுடன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து நாட்டு வெடிகுண்டுகளை கைப்பற்றி சோதனை செய்தனர். நீர் நிரம்பிய வாளியில் 8 வெடிகுண்டுகளையும் பாதுகாப்பாக வைத்து மீட்டனர். பின்னர் அந்த வெடிகுண்டுகளை வல்லநாடு மலையடி வார பகுதிக்கு கொண்டு சென்று தொழில்நுட்ப ரீதியாக செயல் இழக்க செய்தனர். விசாரணை நாட்டு வெடிகுண்டுகள் எதற்காக பதுக்கி வைக்கப் பட்டன? இதில் வேறு யாருக்கும் தொடர்புள்ளதா? என பல்வேறு கோணங்களில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். வாலிபரின் வீட்டில் 8 நாட்டு வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்ட சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/8-country-made-bombs-seized-from-house-police-conduct-intensive-investigation




