சென்னை, காங்கிரஸ் முன்னாள் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;- “தமிழ்நாட்டில் தற்போது பருவநிலை மாற்றம் மற்றும் மழைக்காலச் சூழல் காரணமாக டெங்கு உள்ளிட்ட கொசு மூலம் பரவும் காய்ச்சல்கள் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக டெங்கு மற்றும் உண்ணி காய்ச்சல் குறித்து பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியமாகிறது. காய்ச்சல், கடுமையான தலைவலி, உடல்வலி, கண்களுக்குப் பின்னால் வலி, வாந்தி, அதிக சோர்வு போன்ற அறிகுறிகள் தென்பட்டால் அலட்சியப்படுத்தாமல் உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனை அல்லது ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுகி உரிய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். வீடுகள், அலுவலகங்கள் மற்றும் சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்வது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும். பழைய டயர்கள், தேங்காய் சிரட்டைகள், உடைந்த பிளாஸ்டிக் பொருட்கள், குடுவைகள் உள்ளிட்டவற்றில் தேங்கும் தண்ணீரில் கொசுக்கள் உற்பத்தியாகும் என்பதால் அவற்றை உடனடியாக அகற்ற வேண்டும். அதேபோல், கால்நடைகள் மற்றும் செல்லப்பிராணிகள் இருக்கும் இடங்களில் உண்ணிகள் பெருகாமல் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். உண்ணி காய்ச்சலுக்கான சந்தேக அறிகுறிகள் இருந்தாலும் சுயமாக மருந்து எடுத்துக்கொள்ளாமல் மருத்துவரை அணுக வேண்டும். “காய்ச்சல் வந்தால் காத்திருக்க வேண்டாம்; உடனடியாக மருத்துவ உதவியை நாடுங்கள்” என்பதே அனைவரின் கவனத்தில் இருக்க வேண்டிய முக்கியமான செய்தியாகும். டெங்கு மற்றும் உண்ணி காய்ச்சலை கட்டுப்படுத்துவது அரசின் பொறுப்பு மட்டுமல்ல; பொதுமக்களின் ஒத்துழைப்பும் மிக முக்கியம். உள்ளாட்சி அமைப்புகள் கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். அரசு மருத்துவமனைகளில் தேவையான பரிசோதனை மற்றும் சிகிச்சை வசதிகள் தடையின்றி கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் விழிப்புடன் இருந்து, தங்களையும் தங்கள் குடும்பத்தினரையும் காய்ச்சல் பாதிப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நோய் வந்த பிறகு சிகிச்சை பெறுவதைவிட, நோய் வராமல் தடுப்பதே சிறந்த பாதுகாப்பு!” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/people-must-remain-vigilant-regarding-dengue-and-tick-fever-selvaperunthagai



