காந்திநகர், குஜராத் மாநிலம் அகமதாபாத் மாவட்டத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று இரவு, அங்கு குடியிருக்கும் பெண் ஒருவர் கட்டிடத்தின் மாடியில் நடைபயிற்சி செய்வதற்காக சென்றுள்ளார். அப்போது அவரை பின்தொடர்ந்து சென்ற கட்டிடத்தின் காவலாளி தரம் சிங், அந்த பெண்ணை பலவந்தப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதன் பின்னர் அங்கிருந்து தப்பியோடிய காவலாளி சிங், தனது செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு தலைமறைவானார். இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் காவல்துறையில் புகார் அளித்தார். சம்பந்தப்பட்ட கட்டிடத்தில் 4 நாட்களுக்கு முன்புதான் தரம் சிங் காவலாளியாக வேலைக்கு சேர்ந்துள்ளார். போலீசார் சி.சி.டி.வி. உள்ளிட்ட ஆதாரங்களின் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்தி, ஹெபத்பூர் பகுதியில் பதுங்கியிருந்த தரம் சிங்கை இன்று காலை அதிரடியாக கைது செய்தனர். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், தரம் சிங்கை பணியில் சேர்த்த ஏஜென்சி நிர்வாகத்திடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/india/security-guard-sexually-assaults-woman-four-days-after-starting-work-at-an-apartment-complex




