கீவ் உக்ரைன் மீது ரஷியா நடத்திய தாக்குதலில் இந்தியர் உள்பட 12 பேர் பலியாகி உள்ளனர். உக்ரைன் மீது 2022-ம் ஆண்டு பிப்ரவரியில் ரஷியா தொடங்கிய போரானது, 5-வது ஆண்டாக நீடித்து வருகிறது. உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் ஆயுதங்கள் மற்றும் நிதி உதவியை வழங்கின. ரஷியாவுக்கு, நட்பு நாடான வடகொரியா, ராணுவ தளவாடங்கள் மற்றும் வீரர்களை அனுப்பி மறைமுக உதவி செய்து வருகிறது. போரால் ஆயிரக்கணக்கில் மக்கள் பலியாகியும், லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டும், வீடுகளை விட்டு அடைக்கலம் தேடி வேறு இடங்களுக்கு தப்பியோடியும் விட்டனர். டிரோன் தாக்குதல்கள் போரை முடிவுக்கு கொண்டு வரும் அமெரிக்காவின் மத்தியஸ்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இல்லை. இந்த நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இன்று வெளியிட்ட செய்தியில், ஒடேசா மற்றும் அந்த பகுதியை சுற்றி நேற்று மாலை முதல் வான்வழி வெடிகுண்டு தாக்குதல்கள் மற்றும் டிரோன் தாக்குதல்கள் தொடர்ந்து நடத்தப்பட்டன. ரஷியா நடத்திய இந்த தாக்குதலில், மொத்தத்தில் 12 பேர் பலியாகி உள்ளனர். அவர்களில், ஒருவர் இந்தியர். தவிர 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என தெரிவித்து உள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/world/russia-attack-on-ukraine-12-killed-including-indian




