திருநெல்வேலி, நெல்லை மாநகரம் பெருமாள்புரம், மேலப்பாளையம் பகுதிகளில் 2 கிலோ 250 கிராம் கஞ்சா, 2 செல்போன்கள், 2 பைக்குகளை பறிமுதல் செய்த போலீசார் 2 வாலிபர்களை கைது செய்தனர். வாகன சோதனை திருநெல்வேலி மாநகரம், பெருமாள்புரம் மற்றும் மேலப்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும்படியான 2 வாலிபர்களை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர். அதில் அவர்கள் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. 2.2 கிலோ கஞ்சா, 2 செல்போன், 2 பைக் பறிமுதல், 2 பேர் கைது இதனையடுத்து உயிருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய போதை பொருளான கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த வாலிபர்களான பெருமாள்புரத்தைச் சேர்ந்த சுகுமார் (வயது 23), மேலப்பாளையத்தைச் சேர்ந்த திவான்மைதீன்(22) ஆகிய 2 பேரிடமும் இருந்து மொத்தம் 2 கிலோ 250 கிராம் கஞ்சா, 2 செல்போன்கள் 2 பைக்குகள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்து அந்த வாலிபர்களை சிறையில் அடைத்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/22-kg-of-ganja-2-bikes-seized-in-nellai-2-youths-arrested




