சென்னை, ராகுல்காந்தி தலைமையை எதிர்க்கட்சிகள் ஏற்றுக்கொண்டுள்ளன என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி. தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- தலைமை தேசத்தின் ஜனநாயகத்தையும், அரசமைப்புச் சட்டத்தையும் காக்கும் முதன்மையான மக்கள் தலைவராக விளங்குவது ராகுல்காந்தி மட்டுமே என்பதை ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டுள்ளன. ராகுல் காந்தி தலைமை ஏற்பதில் எந்த ஆட்சேபனையும் இல்லை என திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி வெளிப்படையாக அறிவித்திருப்பது, மக்கள் குரலின் தவிர்க்க முடியாத வலிமையைக் காட்டுகிறது. கூட்டணி அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெளிவான வழிகாட்டுதலின் படி, எவ்வித தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கும் இடமளிக்காமல், நாட்டின் தலையாய ஜனநாயகக் கடமையே கூட்டணிக்கு முதன்மையானது என்பதை INDIA முன்னணி மீண்டும் திட்டவட்டமாக நிரூபித்துள்ளது. அரசியலமைப்பு நிறுவனங்களை அழித்து, மக்களின் வாக்குரிமையைச் சிதைக்க நினைக்கும் சர்வாதிகார பாஜக ஆட்சியை வீழ்த்தி, சாமானிய மக்களின் உரிமைகளை மீட்டெடுக்கும் இந்த ஒற்றுமை இறுதிவரை சமரசமின்றி தொடரும். ஒற்றுமையே நமது வலிமை; மக்கள் குரலே நமது வெற்றி. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/opposition-parties-have-accepted-rahul-gandhis-leadership-manickam-thakur




