ராமநாதபுரம், ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு நபரிடம், பட்டா நிலத்தை அளந்து கணினியில் பதிவேற்றம் செய்ய ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சர்வேயரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர். ராமேசுவரம் தாலுகா அலுவலக சர்வேயர் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியை சேர்ந்தவர் சத்யராஜ் (வயது 34). இவர் ராமேசுவரம் தாலுகா அலுவலகத்தில் சர்வேயராக பணிபுரிந்து வருகிறார். இந்த தாலுகாவுக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த ஒருவர், தனது பட்டா நிலத்தை அளந்து அதனை கணினியில் பதிவேற்றம் செய்யுமாறு சத்யராஜிடம் கூறியுள்ளார். ரூ.5 ஆயிரம் லஞ்சம், கைது அதற்கு அவர் ரூ.5 ஆயிரம் லஞ்சமாக தரவேண்டும் என கூறியுள்ளார். பணம் கொடுக்க விரும்பாத அந்த நபர், இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். அதன்பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார், ரகசியமாக கண்காணித்து சர்வேயர் சத்யராஜை லஞ்சம் வாங்கும்போது கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/ramanathapuram-surveyor-arrested-for-accepting-a-bribe-of-rs5000




