திருநெல்வேலி, திருநெல்வேலியில் மாவட்டத்தில் தமிழ்நாடு மின்சார வாரிய பண்டகசாலையில் காப்பர், அலுமினிய வயர்கள் திருட்டு வழக்கில் 6 பெண்கள் உள்பட 8 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து ரூ.1.62 லட்சம் பணம் மற்றும் 15 கிலோ அலுமினிய ரோலை மீட்டனர். தமிழ்நாடு மின்வாரிய மத்திய பண்டகசாலையில் திருட்டு திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மத்திய பண்டகசாலையில் காப்பர் மற்றும் அலுமினிய வயர்கள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக, திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. விஷ்வேஷ் பாலசுப்பிரமணியம் சாஸ்திரி உத்தரவின்பேரில், தாழையூத்து காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மற்றும் காவல் குழுவினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். காப்பர் வயர்-549.19 கிலோ, அலுமினிய வயர்-15.33 கிலோ 28.8.2026 அன்று மாலை 6 மணி முதல் 29.8.2026 அன்று அதிகாலை 4 மணி வரையிலான நேரத்தில், தாழையூத்து தமிழ்நாடு மின்சார வாரிய மத்திய பண்டகசாலையின் இரண்டு பூட்டுகள் உடைக்கப்பட்டு, அங்கு வைக்கப்பட்டிருந்த Transformer Winding Wire - Copper 549.19 கிலோ மற்றும் Transformer Winding Wire - Aluminium 15.33 கிலோ என சுமார் ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருடப்பட்டன. தாழையூத்து போலீசில் புகார் இதுகுறித்து தமிழ்நாடு மின்சார வாரிய மத்திய பண்டகசாலையின் தலைமை பண்டக அலுவலர் ரவிச்சந்திரன் (வயது 59) அளித்த புகாரின் பேரில், தாழையூத்து காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. 6 பெண்கள் உள்பட 8 பேர் கைது இந்த வழக்கில் தாழையூத்து காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மற்றும் காவல் குழுவினரின் துரிதமான விசாரணை மற்றும் நடவடிக்கையின் மூலம் குற்றத்தில் தொடர்புடைய முக்கூடல் பகுதியைச் சேர்ந்த பாக்கியம்(23), லெட்சுமி(29), பாஞ்சாலி(20), காந்தாரிஅம்மாள்(25), அன்னலெட்சுமி(23) மற்றும் லெட்சுமி(34) ஆகிய 6 பெண்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் திருடப்பட்ட பொருட்களை வாங்கியதாக முக்கூடல் பகுதியைச் சேர்ந்த மகேந்திரகுமார்(42) என்பவரும், திருடப்பட்ட பொருட்களை எடுத்துச் செல்ல ஆட்டோ பயன்படுத்தியதாக நடுவக்குறிச்சியைச் சேர்ந்த கல்லத்தியான்(53) என்பவரும் கைது செய்யப்பட்டனர். ரூ.1.62 லட்சம், 15 கிலோ அலுமினிய ரோல் பறிமுதல் கைது செய்யப்பட்ட 8 நபர்களிடமிருந்து ரூ.1 லட்சத்து 62 ஆயிரம் பணம் மற்றும் 15 கிலோ அலுமினிய ரோல் ஆகியவை மீட்கப்பட்டன. கைது செய்யப்பட்ட 8 நபர்களும் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் இந்த வழக்கில் திருடப்பட்ட பொருட்கள் மற்றும் சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. வழிகாட்டுதலின்படி, மாவட்ட காவல்துறையினர் குற்றச்செயல்களைத் தடுக்கும் வகையிலும், திருட்டு உள்ளிட்ட குற்ற வழக்குகளில் தொடர்புடைய நபர்களை விரைந்து கண்டறிந்து கைது செய்யும் வகையிலும் தொடர்ந்து தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/theft-of-copper-and-aluminum-wires-from-the-electricity-board-warehouse-8-people-including-6-women-arrested




