திருச்செந்தூர், வாந்தி, மயக்கம் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கரம்பவிளை பகுதியை சேர்ந்தவர் பேச்சிமுத்து (வயது 44). கூலித்தொழிலாளி. இவர் தனது நண்பர்கள் சிலருடன் திருச்செந்தூர்- குலசேகரன்பட்டினம் சாலையில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்றார். அங்கு 3 குவாட்டர் மதுபாட்டில்கள் வாங்கியுள்ளார். அதில் ஒரு பாட்டிலில் இருந்த மதுவை பேச்சிமுத்து அருந்தினார். சிறிது நேரத்தில் அவருக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட் டது. மதுபாட்டிலில் வண்டு இதையடுத்து தாங்கள் வாங்கிய மற்றொரு மதுபாட்டிலை பார்த்தபோது, அதில் இறந்த நிலையில் வண்டுகள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். எனவே தான் அருந்திய மதுபாட்டிலும் இறந்த நிலையில் வண்டு கிடந்திருக்கலாம் எனவும், அதை குடித்ததால் தான் வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் பேச்சிமுத்து கூறினார். உடனடியாக மற்ற நண்பர்கள் சேர்ந்து பேச்சிமுத்துவை மீட்டு திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. டாஸ்மாக் கடையில் வாங்கிய மதுபாட்டிலில் இறந்த நிலையில் வண்டுகள் கிடந்த மதுவை குடித்த மதுப்பிரியருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்ட சம்பவம் மதுப்பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/beetle-found-in-quarter-bottle-bought-at-tasmac-shop-drinker-suffers-vomiting-and-dizziness




