டெல்லியில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடுகளுக்கு எதிராக போராடிய கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் கடந்த மாதம் 20-ந்தேதி நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்தினர்.ஏராளமான மாணவர்களுடன் நடந்த இந்த பேரணியில் போலீசாருக்கும். மாணவர்களுக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் போலீ சார் தடியடி, கண்ணீர் புகை குண்டுவீச்சு போன்ற நடவடிக்கை எடுத்த னர். மேலும் பெல்லட் துப்பாக்கிச்சூடும் நடந்தது. போலீசாரின் இந்த அத்துமீறலில் ஏராளமான மாணவர்கள் காயம்அடைந்தனர். மேலும் போலீசாருக்கும் காயம் ஏற்பட்டது. சி.பி.ஐ. முன்னாள் இயக்குனர் இந்த வன்முறை தொடர்பாக போராட்டக்காரர்கள் மற்றும் போலீசார் தரப் பில் தனித்தனியாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இவற்றை தலைமை நீதிபதி சூர்யகாந்த் அமர்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்கு நேற்றும் தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜோய் மால்யா பாக்சி, மோகனா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மாணவர்கள் மீதான போலீசாரின் அத்துமீறல் புகாரை விசாரிக்க உயர்-அதிகாரம் கொண்ட விசாரணை கமிட்டி ஒன்றை அமைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி சுபாஷ் ரெட்டி தலைமையிலான இந்த கமிட்டியில், பஞ்சாப்-அரியானா ஐகோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி ரவிசங்கர் ஜா, டெல்லி ஐகோர்ட்டு முன்னாள் நீதிபதி ஷலிந்தர் கவுர், சி.பி.ஐ. முன்னாள் இயக்குனர் ரிஷி குமார் சுக்லா மற்றும் ஓய்வு பெற்ற மேகாலயா டி.ஜி.பி. பிஸ்னோய் ஆகியோர் இடம்பெற்று உள்ளனர். நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியதாவது:- விலைமதிப்பற்ற பரிந்துரை இந்த உயர் அதிகார விசாரணைக்குழு அதன் ஒவ்வொரு உறுப்பினரின் தனிப்பட்ட நிபுணத்துவம் மற்றும் அனுபவம், பன்முகத்தன்மை உள்ளிட்ட பல்வேறு காரணிகளை கருத்தில் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. உரிய பரிசீலனைக்கு தகுதியான அனைத்து பிரச்சினைகளையும் இக்குழுவால் முழுமையாக மதிப்பீடு செய்ய முடியும் என்றும் நாங்கள் உறுதியாக நம் புகிறோம். இந்த குழு மேற்கொள்ளும் விசாரணையானது ஒருமுறை மட்டும் செய் யப்படும் நடவடிக்கையாக இருக்காது. மாறாக பிரச்சினைகள் குறித்து தொடர்ச்சியான மற்றும் காலமுறை மதிப்பீட்டை மேற்கொண்டு, இடைக் கால அறிக்கைகளை அவ்வப்போது சமர்ப்பிக்குமாறு விசாரணைக்கு ழுவை கேட்டுக்கொள்கிறோம். முன்னுரிமை அடிப்படையில் தரவு பெண் போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்டதாக கூறப்படும் குறிவைத்த வன்முறை, துன்புறுத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் உள்ளிட்ட சில பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் தீர்வு காண வேண்டும். போலீஸ் அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப்படை வீரர்களால் போராட்டக் காரர்களுக்கு ஏற்பட்டதாக கூறப்படும் கடுமையான பாதிப்பு மற்றும் காயங்களையும் இந்த கமிட்டி மதிப்பீடு செய்யலாம்.மேலும், அத்தகைய அத்துமீறல்களுக்கு வழிவகுத்த அதிகார பின்புலம், அத்தகைய செயல்களுக்கு பொறுப்பானவர்கள், மற்றும் அத்தகைய பலத்தை பிரயோகிப்பதில் தற்போதுள்ள சட்டங்கள், விதிகள் அல்லது நெறிமுறைகளில் ஏதேனும் மீறல்கள் இருந்தனவா என்பன போன்ற அம் சங்களையும் விசாரிக்கலாம்.இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/india/committee-headed-by-a-former-judge-to-probe-police-excesses-during-the-delhi-students-protest




