நல்லம்பள்ளி, சட்டவிரோதமாக பாலினம் கண்டறிந்து கர்ப்பிணிக்கு கருக்கலைப்பு செய்த நர்சு குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். தர்மபுரி மாவட்டம் பாளையம்புதூர் கிராமத்தை சேர்ந்த ஒரு தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் மீண்டும் கர்ப்பிணியாக இருந்ததால் கருவில் உள்ள சிசுவை கண்டறிய சட் டவிரோதமாக ஸ்கேன் செய்யப்பட்டு கருவில் இருப்பது பெண் சிசு என தெரிந்ததால் அந்தப் பெண்ணுக்கு கருக்கலைப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்ட அவர் தர்மபுரி தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இது தொடர்பாக விசாரணை நடத்திய தர்மபுரி மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர் பாரதி மற்றும் அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் பெண்ணுக்கு கருக்கலைப்பு செய்த தர்மபுரியைச் சேர்ந்த நர்ஸ் கற்பகம் (வயது 43) இடைத்தரகராக செயல்பட்ட பச்சியம்மாள் ஆகியோரை கடந்த 30-ந்தேதி அதியமான் கோட்டை போலீசார் கைது செய்தனர். கற்பகம் கர்ப்பிணிகளுக்கு சட்டவிரோதமாக கருவில் உள்ள சிசுவின் பாலினம் கண்டறிந்து தெரிவிப்பது, கருக்கலைப்பு செய்வது ஆகிய குற்றச்செயல்களில் ஏற்கனவே ஈடுபட்டு கைது செய்யப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்தது. இதனால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்கபிலன் உத்தரவுப்படி கற்பகத்தை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் சரவணன் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து கற்பகத்தை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் மீண்டும் கைது செய்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/nurse-arrested-under-the-goondas-act-for-performing-an-abortion-on-a-pregnant-woman-after-determining-the-fetus-was-female



