வாஷிங்டன், அமெரிக்காவின் கிழக்கு கடற்கரைப் பகுதியை தாக்கிய சக்திவாய்ந்த 'நார்ஈஸ்டர்' புயல் மற்றும் கடுமையான வெள்ளப்பெருக்குக்கு மத்தியில், குடியிருப்பு வீதி ஒன்றில் சுறா மீன் நீந்திச் சென்ற அரிய காட்சி உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. புயல்- வெள்ளப்பெருக்கு அமெரிக்காவின் நியூ ஜெர்சி உள்ளிட்ட வடகிழக்கு மாகாணங்களை கடந்த 26-ந்தேதி அன்று நார்ஈஸ்டர் புயல் மிகக் கொடூரமாகத் தாக்கியது. மணிக்கு சுமார் 70 மைல் வேகத்தில் வீசிய பலத்த காற்று மற்றும் இடைவிடாத கனமழையினால் நியூ ஜெர்சி மாகாணத்தில் உள்ள சர்ப் சிட்டி உள்ளிட்ட பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டன. இந்த மோசமான வெள்ளத்தால் பெரும் பொருள் சேதமும், உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளன. வெள்ளத்தில் நீந்திய சுறா நியூ ஜெர்சியின் கடலோரத் தீவுப் பகுதியான சர்ப் சிட்டியில் வசித்து வருபவர் ட்ரூ ப்ரோகாசினோ. இவர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட அன்று மதியம் தனது வீட்டு வாசலில் ஒரு விசித்திரமான காட்சியைக் கண்டுள்ளார். கடல் நீர், அருகில் இருந்த பேர்காட் விரிகுடாவை தாண்டி குடியிருப்புப் பகுதிக்குள் சுமார் 4 அடி உயரத்திற்கு சூழ்ந்திருந்த நிலையில், அதில் ஒரு சிறிய சுறா மீன் ஒன்று நீந்தி வந்துள்ளது. அந்த சுறாவின் முதுகுத் துடுப்பு தண்ணீருக்கு மேலே தெரிந்தபடி, அவரது காரை நிறுத்தும் இடம் வரை நீந்திச் சென்றதை அவர் தனது மொபைலில் வீடியோவாகப் பதிவு செய்தார். ஆய்வாளர்கள் விளக்கம் வழக்கமாக வெள்ளக் காலங்களில் பரவும் போலித் தொழில்நுட்ப படங்கள் போலன்றி, ஸ்மித்சோனியன் இதழ் இந்த விசித்திரமான சம்பவம் முற்றிலும் உண்மையானது என உறுதிப்படுத்தியுள்ளது. கடல்வாழ் உயிரின ஆராய்ச்சியாளரான டாக்டர் கிரெக் ஸ்கோமல் இந்த காணொளியை ஆய்வு செய்து, அது அந்த பிராந்தியக் கடலோரப் பகுதிகளில் பரவலாகக் காணப்படும் 'ஸ்மூத் டாக்பிஷ்' என்ற சிறிய வகை சுறா மீன் என்பதை அடையாளப்படுத்தியுள்ளார். இந்த வகை சுறாக்கள் நண்டுகள் மற்றும் சிறிய மீன்களை மட்டுமே உண்ணும் தட்டையான பற்களைக் கொண்டவை என்பதால் மனிதர்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். வெள்ளப் பெருக்கில் வழிதவறி குடியிருப்புக்குள் வந்த இந்த சுறா மீன், பின்னர் வெள்ள நீர் வடியத் தொடங்கியதும் மீண்டும் பத்திரமாக விரிகுடா பகுதிக்கு நீந்திச் சென்றுவிட்டதாக உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன. இருப்பினும், புயல் வெள்ளத்தின் கோர முகத்திற்கு நடுவிலும் இந்த சுறாவின் காணொளி இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. A dogfish shark was spotted swimming through the flooded streets of Surf City, New Jersey, amid severe coastal flooding on September 26. — Massimo (@Rainmaker1973) September 28, 2026 முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/world/new-jersey-floods-commotion-as-a-shark-swims-right-up-to-a-doorstep




