புதுச்சேரி, புதுச்சேரி முதலியார்பேட்டை பகுதியில் வீடுகளின் மொட்டை மாடிகளில் காயப்போட்ட துணிகள், அதிலும் குறிப்பாக பெண்களின் உள்ளாடைகள் அடிக்கடி காணாமல் போனது. இது குறித்து அப்பகுதியை சேர்ந்த ஜெயந்தி என்ற பெண் காவல்துறையில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தியபோது, அருகில் உள்ள பிரெஞ்ச் குடியிருப்பு பகுதியில் பாழடைந்த நிலையில் இருக்கும் வீடுகளுக்குள், காணாமல் போன பெண்களின் உள்ளாடைகள் களங்கம் செய்யப்பட்ட நிலையில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அருகில் சில மதுபாட்டில்களும் கிடந்துள்ளன. இதைத் தொடர்ந்து போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் வேணு(வயது 44) என்ற நபரை பிடித்து விசாரித்தனர். டெய்லராக வேலை செய்து வந்த வேணு, அடிக்கடி குடித்துவிட்டு தகராறு செய்து வந்ததால், அவரது மனைவி மற்றும் குழந்தைகள் தனியாக பிரிந்து சென்றுவிட்டனர். இந்நிலையில், தனியாக வசித்து வந்த வேணு தனது வீட்டை வாடகைக்கு விட்டு, அதில் வரும் பணத்தில் மது அருந்தி, கடற்கரை மற்றும் பாழடைந்த வீடுகளில் தஞ்சமடைந்து வாழ்ந்து வந்துள்ளார். அந்த சமயத்தில்தான் பெண்களின் உள்ளாடைகளை திருடி களங்கம் செய்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து போலீசார் வேணு மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/india/tailor-arrested-for-stealing-womens-underwear-in-puducherry




