கோவை மாவட்டம் தடாகம் அடுத்த மடத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன் (24). புகைப்படக் கலைஞரான இவர், கடந்த வாரம் வியாழக்கிழமை தனக்குப் புதிய புகைப்பட ஆர்டர் ஒன்று வந்து இருப்பதாகக் கூறிவிட்டு, ஒட்டன்சத்திரத்திற்குப் புறப்பட்டுச் சென்று உள்ளார். அதன்பின் அவர் வீடு திரும்பாததால், சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் தடாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து அவரைத் தீவிரமாகத் தேடி வந்தனர். இதனிடையே கிணத்துக்கடவு அருகே உள்ள ரயில்வே தண்டவாளத்தில் பிரவீன் உடல் கண்டெடுக்கப்பட்டது. பிரவீன் தற்கொலை செய்திருக்கலாம் எனக் கருதப்பட்ட நிலையில், ரயில்வே காவல் துறையினர் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், இவ்வழக்கில் திடீர் திருப்பமாக கரூரைச் சேர்ந்த மனோஜ் மற்றும் அவரது நண்பர் கார்த்திக் ஆகியோர் கோவை நீதிமன்றத்தில் ஆஜராகி, “நாங்கள்தான் பிரவீனைத் திட்டமிட்டுக் கொலை செய்து தண்டவாளத்தில் வீசினோம்” எனக்கூறி சரணடைந்தனர். மனோஜ் இதையடுத்து காவல் துறையினர் அவர்களிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. கரூரைச் சேர்ந்த மனோஜ்குமார் என்பவரும், கோவை சாய்பாபா காலனியைச் சேர்ந்த ஒரு பெண்ணும் கடந்த 4 வருடங்களாக இன்ஸ்டாகிராம் மூலமாகக் காதலித்து வந்து உள்ளனர். இதற்கிடையே, அந்தப் பெண் பிரவீனுடனும் பழகி வந்து உள்ளார். இது குறித்து அறிந்த மனோஜ் தங்களது காதலுக்கு பிரவீன் இடையூறாக இருப்பதாகக் கருதி, அவரைக் கொலை செய்யத் திட்டமிட்டதாகத் தெரிகிறது. கார்த்திக் இன்ஸ்டாகிராம் மூலம் பிரவீனைத் தொடர்பு கொண்ட மனோஜ், ஒட்டன்சத்திரத்தில் ஒரு போட்டோ ஷூட் இருப்பதாகக் கூறி வரவழைத்துள்ளார். அதனை நம்பி சென்ற பிரவீனை மது குடிக்க வைத்து, தனது நண்பர் கார்த்திக் காரில் அழைத்துச் சென்று கழுத்தை நெறித்து கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் கொலையை மறைக்க வேண்டி பிரவீனின் சடலத்தைக் கொண்டு சென்று, ரயில் தண்டவாளத்தில் போட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த ரயில் பிரவீனின் உடல் மீது ஏறியதில், அவரது உடல் துண்டாகி சிதறியது. இந்த நிலையில் காவல் துறையினர் தங்களைக் கண்டுபிடித்து விடுவார்கள் என்ற அச்சத்தில் இருவரும் நீதிமன்றத்தில் சரண் அடைந்ததாகத் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. “கெஞ்சினேன். கேட்கவில்லை. எடுத்தேன் கத்தியை.” - கொலை வழக்கில் சிக்கியவர் கைதாகாத பின்னணி முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.vikatan.com/government-and-politics/photographer-body-dumped-on-railway-tracks-investigation-reveals-revenge




