நாகர்கோவில், ஆவணி மாத 2-வது ஞாயிற்றுக்கிழமையையொட்டி நாகர்கோவில் நாகராஜா கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமிதரிசனம் செய்தனர். ஆவணி 2-வது ஞாயிறு குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான நாகர்கோவில் நாகராஜா கோவில் நாகதோஷ பரிகாரத் தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. இங்கு ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றி வழிபடுவது விசேஷமாகும். இதனால் ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். அவ்வகையில் இந்த ஆண்டின் ஆவணி மாத 2-வது ஞாயிற்றுக்கிழமையையொட்டி, இன்று அதிகாலையில் இருந்தே கோவிலில் பக்தர்கள் கூட்டம் அளவுக்கு அதிகமாக இருந்தது. கோவிலின் வெளியே உள்ள பிரதான நுழைவு வாயில் வரை பக்தர்கள் நீண்டவரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு தேவையான குடிநீர் வசதி உள்ளிட்டவைகளையும் கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டு இருந்தது. கோவில் வளாகத்தில் உள்ள நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றியும், மஞ்சள் பொடி தூவியும் வழிபாடு செய்தார்கள். தற்காலிக கடைகள் கோவிலுக்கு உள்ளூர், வெளியூர் மற்றும் கேரள மாநிலத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் குடும்பம், குடும்பமாக வந்து வழிபாடு செய்தனர். பலர் கைக்குழந்தைகளோடு வந்து சாமி தரிசனம் செய்தார்கள். இதனால் மதியம் நடை சார்த்துவது சற்று தாமதம் ஆனது. பக்தர்கள் வசதிக்காக அவர்களுக்கு தேவையான பால் பாக்கெட், மஞ்சள் பொடி, பூ, பழம், தேங்காய் தட்டு உள்ளிட்டவற்றை கோவில் வளாகத்துக்குள்ளேயே விற்பனை செய்யப்பட்டது. கோவிலுக்கு வந்த பக்தர்களின் வாகனங்கள் அனைத்து நாகராஜா திடலில் நிறுத்தப்பட்டு இருந்ததால், திடல் முழுவதும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. மேலும் கோவில் செல்லும் சாலையின் இருபுறமும் தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/devotional/aavani-second-sunday-devotees-thronged-the-nagercoil-nagaraja-temple




