படத்தின் வெளியீட்டுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில் ‘ஹைவான்’ படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அக்ஷய் குமார். இவர் தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘2.0’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் இவரது நடிப்பில் ‘ஓம்எம்ஜி 2’, ‘சர்பிரா’, ‘கேல் கேல் மெய்ன்’, ‘சிங்கம் அகெய்ன்’ உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகின. மீண்டும் இணைந்த அக்சய் குமார் - சயிப் அலிகான் பாலிவுட்டின் முன்னணி நடிகரான சயீப் அலிகானும் தற்போது திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். இவர் கடந்த 2012-ம் ஆண்டு நடிகை கரீனா கபூரை திருமணம் செய்துகொண்டார். தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் வெளியான ‘தேவரா’ திரைப்படத்திலும் நடித்திருந்தார். அக்சய் குமார் மற்றும் சயீப் அலிகான் இருவரும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘ஹைவான்’. இப்படத்தை இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கியுள்ளார். கடந்த 2016-ம் ஆண்டு மோகன்லால் நடிப்பில் வெளியான மலையாள திரைப்படமான ‘ஒப்பம்’ படத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. 17 ஆண்டுகளுக்கு பிறகு கூட்டணி சுமார் 17 ஆண்டுகளுக்குப் பிறகு அக்ஷய் குமார் மற்றும் சயீப் அலிகான் மீண்டும் இணைந்து நடித்துள்ளதால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. ‘ஹைவான்’ திரைப்படத்தை கே.வி.என் புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் வெங்கட் கே. நாராயணா மற்றும் ஷைலஜா தேசாய் பென்னின் தெஸ்பியன் பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தில் சயாமி கெர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். செப்டம்பர் 11-ம் தேதி ரிலீஸ் ‘ஹைவான்’ படத்தின் படப்பிடிப்பு மும்பை, கொச்சி மற்றும் ஊட்டி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது. தற்போது படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இப்படம் வரும் செப்டம்பர் 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு ஏற்கனவே போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. வெளியானது ‘ஹைவான்’ டிரெய்லர் படத்தின் வெளியீட்டுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில் ‘ஹைவான்’ படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதிரடி காட்சிகளுடன் வெளியாகியுள்ள இந்த டிரெய்லர் தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து, இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்படம் வரும் செப்டம்பர் 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. Andhere mein chhupa tha ek khauf. Aaj uska chehra saamne hai. Aur uske saamne khada hai woh jo andheron mein hi jeeta hai.#Haiwaan முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/cinema/cinemanews/saif-ali-khan-and-akshay-kumars-haiwaan-film-trailer-out




