புதுடெல்லி, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை (திங்கட்கிழமை) தொடங்கி ஆகஸ்டு 13-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு ஆளுங்கட்சி கூட்டும் அனைத்துக் கட்சி கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் அனைத்துக் கட்சி தலைவர்களும் கலந்து கொள்கிறார்கள். அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டத்தில் எதிர்க்கட்சியினர் பேசுவதற்கு பல்வேறு விஷயங்கள் கிடைத்துள்ளன. குறிப்பாக நேற்று ஜந்தர்மந்தரில் இருந்து சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கை வெளியேற்றிய விவகாரம் பற்றி அனைத்து எதிர்கட்சியினரும் பேச இருக்கிறார்கள். இது அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. இதேபோல அயோத்தி ராமர் கோவில் நன்கொடைகள் கையாடல் செய்யப்பட்டதாகக் கூறப்படும் விவகாரமும் இன்றைய கூட்டத்தில் விஸ்வரூபம் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/india/all-party-meeting-in-delhi-today




